தைராய்டு கண் நோய்
தசைகள், கொழுப்பு மற்றும் பார்வை நரம்புகளால் கண்கள் சூழப்பட்டுள்ளன. தைராய்டு கண்நோய் ஏற்பட்டால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும், தசைகள் தடிமனாகும். இதனால் கண்கள் முன்புறம் வெளிவரும் . கண்கள் பெரிதாக தெரியும். முன்புறம் தள்ளியபடி தோற்றமளிக்கும் (Proptosis) பார்வை நரம்பும் பாதிக்கப்படும். சில கருவிழியில் புண், கண் நீர் அழுத்தம், மாறுகண் போன்ற குறைபாடுகள் ஏற்படும். தைராய்டு கண் நோய் அறிமுகம், அறிகுறிகள், காரணங்கள், ஆய்வு, பரிசோதனை , எக்ஸ்ஆப்தால்மோமீட்டர் , சிகிச்சை, கவனத்தில் கொள்ள வேண்டியவை, பக்க விளைவுகள், கண்தசை அறுவை சிகிச்சை, கண்குழி அறுவை சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது .