அறிமுகம்:
கருவிழியில் ஏற்படும் காயம், சில கிருமிகள் தொற்று, சத்து குறைவு மற்றும் நரம்பு பாதிப்பு ஆகிய காரணங்களால் கருவிழியில் புண் ஏற்படலாம்.
- ⭕வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று.
- ⭕கண்ணில் காயம்.
- ⭕காண்டாக்ட் லென்ஸ் .
- ⭕அசுத்தமான நீர்.
- ⭕குறைவான நோய் எதிர்ப்புத் திறன்.
- ⭕வெப்ப வானிலை.
- ⭕சில வகை சொட்டு மருந்துகள் - ஸ்டீராய்ட்ஸ் .
கண்ணீர் வடிதல் கண்கள் சிவப்படைதல் கண்ணில் வலி
மங்கலான பார்வை தூசி விழுந்த உணர்வு கண் இமையைத் திறக்க கஷ்டம்
கண் கூசுதல் கருவிழியில் வெண் புள்ளிகள்.
காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். பாக்டீரியா அல்லது பூஞ்சைகளால் ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த சொட்டு மருந்துகள் (Antibacterial and Antifungal) உள்ளன. வைரஸ்களால் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்த சொட்டு மருந்துகள் (AntiViral) உள்ளன. மருந்துகளால் புண் ஆறவில்லை எனில் ஊசி மற்றும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையை தேவைப்படலாம்.
சொட்டு மருந்து:
கண் சொட்டு மருந்து கார்னியல் கருவிழியில் வரும் புண்ணுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் வரிசையாகும்.
சொட்டு மருந்துகளுக்கு குணமடையவில்லை என்றால் கருவிழியில் ஊசி போடப்படுகிறது.
ஊசி :
கருவிழியில் ஊசி வடிவில் மருந்து கொடுக்கப்படும் .
கெராட்டோபிளாஸ்டி:
பாதிக்கப்பட்ட கருவிழியை அகற்றி ஆரோக்கியமான, நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழியைப் பொருத்தும் அறுவை சிகிச்சையே மருத்துவ உலகில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை எனப்படுகிறது. சில அறுவை சிகிச்சைகளில் முழு கருவிழியும் அகற்றப்படும் அல்லது சில பாகங்கள் மட்டுமே அகற்றப்படும். சிக்கலான சில கருவிழி நோய்களைக் குணப்படுத்த இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நோய்த் தொற்றைக் குணப்படுத்தவும் பார்வையைப் பாதுகாக்கவும் இது சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. பெரும்பான்மையான நோயாளிகளுக்கு இந்த வகை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைகின்றன.
அறுவை சிகிச்சைப் பற்றி:
ஒரு மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை முடிந்துவிடும். மயக்கமருந்து கொடுக்கப்படும். எனவே, நோயாளிகளுக்கு வலி தெரியாது.
◼பாதிக்கப்பட்ட கருவிழி வளையம் கண்ணிலிருந்து அகற்றப்படும்.
◼ஆரோக்கியமான, நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழி பொருத்தப்படும்.
◼கருவிழியைச் சரியாகப் பொருத்த, தையல் போடப்படும்.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சை வகைகள்:
◼தெரபெடிக் கெரடோபிலாஸ்டி (Therapeutic Keratoplasty): கார்னியல் அல்சர் நோயாளிகளுக்கு
◼பெனடிரெட்டிங் கெரடோபிலாஸ்டி (Penetrating Keratoplasty): கெரடோகோனஸ், கண் துருத்தல் மற்றும் கண்ணில் தழும்பு கொண்ட நோயாளிகளுக்கு
நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழி திசுக்களை நோயாளியின் உடல் திசுக்கள் தாக்கும்போது நிராகரித்தல் நிகழும். கண் சிவப்பாக இருத்தல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல், பார்க்கும்போது மேகமூட்டம் போல உணர்தல், கண் வலி உள்ளிட்டவை நிராகரிப்பின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றினால் கண் மருத்துவரை உடன் அணுகவும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் ஸ்டிராய்டு கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.
அறுவை சிகிச்சைக்கு தயாராகுதல்:
அறுவை சிகிச்சைக்கு முன்:
◼அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா, உங்களுக்கு பொருந்துமா என அறிய கண் மருத்துவரிடம் கண் பரிசோதனை மேற்கொள்ளவும்.
◼நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் பற்றியும் விரிவாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு:
◼மருத்துவர் மற்றும் ஆலோசகர்களின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவும். பரிந்துரைக்கப்பட்டபடி கண் சொட்டு மருந்துகளை அல்லது மருந்துகளைப் பயன்படுத்தவும்.
◼கண்கள் அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும்.
◼கண் மருத்துவர் குறிப்பிடும் நாட்களில் மறு பரிசோதனைக்கு தவறாமல் செல்லவும்.
அசுத்தமான ஆறு, குளங்களில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
புண் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
- ◼ கருவிழியில் காயம் ஏற்பட்டால் கவனம் தேவை.
- ◼கண்களுக்குள் தண்ணீர் விட்டு கழுவ வேண்டாம்.
- ◼ஒவ்வொருமுறை மருந்துகள் விடும்போது 5 to 10 நிமிடம் கண்களைமூடி படுக்க வேண்டும்.
- ◼கண் வலி அல்லது சிவப்பு அதிகம் ஆனால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- ◼உறுத்தல் முழுமையாக மாறிய பின்பு குளிக்க வேண்டும்.
- ◼மருத்துவர் குறிப்பிடும் நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.
- ◼ஏனெனில் தழும்பு ஏற்பட்டால் பார்வை பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
- ◼கொடுக்கப்பட்டுள்ள ஒரு மருந்தை விட்ட பின் அடுத்து மருந்து 5 to 10 நிமிடம் கழித்து விடவும். மருந்துகளை குறிப்பிட்ட நேரம் விட வேண்டும்.
- ◼மாத்திரைகள் உணவு சாப்பிட்ட பின் சாப்பிடவும்.
- ◼சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் வைக்கவும்.
- ◼கருவிழியில் காயம் ஏற்பட்டால் கவனம் தேவை.
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
- என் கண் புண்ணில் வலி எப்போது குறைய ஆரம்பிக்கும்?
- மருந்து புண்ணை ஆற்ற ஆரம்பித்தவுடன் வலி குறைய ஆரம்பிக்கும். வலி நிவாரணி மாத்திரைகளும் வலியை தற்காலிகமாக குறைக்கலாம்.
- எனக்கு பார்வை திரும்ப கிடைக்குமா?
- புண் குணமான பிறகு சில புண்கள் வடு இல்லாமல் குணமாகும். வடு தொடர்ந்தால், சிறந்த பார்வை பெற கண்ணாடி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
- புண் எப்போது குணமாகும், எவ்வளவு காலம் நான் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
- இது புண்களின் அளவைப் பொறுத்தது. பெரிய புண்கள் குணமடைய அதிக நேரம் எடுக்கும். புண் ஏற்படுவதற்கான காரணமும் முக்கியமானது. பூஞ்சை புண்கள் குணமடைய அதிக நேரம் எடுக்கும். விரைவாக குணமடைய, உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆலோசனையின்படி கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தவும்.
- நான் எப்போது சோதனைக்கு வர வேண்டும்?
- உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் போதெல்லாம்.
- நான் எப்போது தலைக்கு குளிக்கலாம்?
- புண் முழுவதுமாக குணமானதும் தலைக்குக் குளிக்கலாம். அது சரியாகும் போது உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்வார்.
- ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா, அப்படியானால், எனக்கு முழு பார்வை கிடைக்குமா?
- அறுவை சிகிச்சை ஒரு கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புண் குணமானவுடன், பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்யலாம்.
- மேலும், உங்கள் புண் மருந்துகளால் குணமடையவில்லை என்றால், நீங்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
Comments