ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (ALLERGIC CONJUNCTIVITIS)
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (ALLERGIC CONJUNCTIVITIS)
Admin
13 November 2021
(0)
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (ALLERGIC CONJUCTIVITIS)
ஒவ்வாமை என்றால் என்ன?
நோயெதிர்ப்பு மண்டலத்தின் அசாதாரண எதிர்வினையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பு மகரந்தம், தூசி, விலங்குகளின் பொடுகு, சில உணவுகள், பூச்சிகள் கொட்டுதல் போன்ற பொதுவாக பாதிப்பில்லாத பொருட்களுக்கு எதிர்வினையாற்றுகிறது ஒவ்வாமை என குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வாமை உள்ளவர்கள் - அறிகுறி :
•கண் சிவத்தல் மற்றும் எரிச்சல்
•கண் அரிப்பு
•நீர் வடிதல்
•தும்மல்
•எரியும் கண்கள்
ஒவ்வாமைக்கான காரணங்கள்:
•மகரந்தம்
•தூசி கிருமிகள்
•அழகுசாதனப் பொருட்கள் (ஐலைனர்)
•வாசனை திரவியங்கள்
•புகை
எப்போது வெளியில் செல்லக்கூடாது:
இந்த ஒவ்வாமை உண்டாக்கும் கிருமிகள் மற்றும் நுண் அமைப்புகள் காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் காற்றில் காணப்படுகின்றன.
ஒவ்வாமை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் கைகளிலும் கண்களிலும் இருக்கலாம். கைகளை அடிக்கடி கழுவவும். கண்களை மூடிக்கொண்டு வெளியில் கழுவுவது நல்லது.
கண் அரிப்பு ஏற்பட்டால் கைகளால் தேய்க்க வேண்டாம். குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ் கட்டியை ஒரு துணிக்குள் வைத்து மூடிய கண்களின் மீது வைக்கலாம்.
மகரந்தம் மற்றும் தூசியைத் தவிர்க்க வெளியே செல்லும் பொது சன்கிளாஸ் அணிந்து கண்களைப் பாதுகாக்கவும்.
தூசிப் பூச்சிகளை அழிக்க படுக்கை விரிப்புகளை வெந்நீரில் துவைக்கவும்.
உங்கள் படுக்கையறைக்குள் செல்லப்பிராணிகளை அனுமதிக்காதீர்கள். செல்லப்பிராணிகளைத் தொட்ட உடனேயே கைகளை நன்றாக கழுவுங்கள்.
வீட்டிலும் அலுவலகத்திலும் கனமான திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகளைத் தவிர்க்கவும்.
அறைகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள்.
கண்களில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுவதைத் தவிர்க்கவும்.
சுத்தமான நாப்கின் பயன்படுத்தவும். தினமும் தண்ணீரில் கழுவவும்.
வெந்நீரில் குளிப்பது நல்லது. கண்களைச் சுற்றி சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
சீதோஷ்ண நிலை மாறும்போது ஒவ்வாமை / கிருமிகள் மாறும்போது நோய் வேகமாக குணமாகும்.
மருந்துகள் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர முழுமையான நிவாரணம் தருவதில்லை.
எனவேமருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது மீண்டும் மீண்டும் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம்.
Comments