டென்ஷன் தலைவலி (பிடரி தலைவலி )


    டென்ஷன் தலைவலி அல்லது பதற்ற தலைவலி வந்தால் தலை முழுவதும் வலி இருக்கும். சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை தொடரலாம்.







காரணங்கள் :

கண் காரணிகள்:

    கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு, கண்ணில் காயம், கண்ணாடி ஒவ்வாமை, மின்னியல் கருவிகள் - அலைபேசி, கணினி.


மனோவியல் காரணிகள்:

அதிர்ச்சி

மன அழுத்தம்                                   

கோபம் 

பதற்றம் 



இதர காரணிகள்:

பரம்பரை 

அதிக உடற்பயிற்சி                                         

அறுவை சிகிச்சை 

விபத்து காயங்கள் 


சூழலியற் காரணிகள்:              

பிரகாசமான ஒளி (வெயிலில் அலைச்சல் )

புகை                                                                                    

கால நிலை மாற்றங்கள் 

அதிக சத்தம் 

மருந்துகள் (கருத்தடை மாத்திரைகள் )

வேலைப்பழு


உடலியல் காரணிகள்:

களைப்பு 

மாதவிடாய் நேரம் (ஈஸ்ரோஜன்  குறைவு )  

சில உணவு வகைகள் 

போதிய உணவின்மை 

குடி பழக்கம் 

நீர் சத்து குறைபாடு  

அதிக நேர பயணம் 

தூக்கமின்மை 

நோய்த் தொற்று 

வாதம்


நோய்த் தொற்று :

    நோய்த் தொற்று (Infection) முகத்தில் அல்லது தலையில் வலியுடன் கூடிய (கட்டிகள், பக்கோட்டி) தலைவலி வரலாம்.


தோரணை: 

    நிற்கும்போதும், உட்காரும்போதும் சரியான தோரணை(படம்) கடைபிடிக்காமல் இருத்தல் (சரியாக நிற்காமலும், உட்காராமலும், தலையை சரியாக வைக்காமலும் இருத்தல் - படத்தை கவனிக்கவும்)





         



வாதம்:


 கழுத்து வாதம் அல்லது உணவை மெல்லும் எலும்பு கூட்டு(Joint) வாதத்தால் பாதிக்கப்படுதல்.


வலி :


    டென்ஷன் தலைவலி வந்தால் தலை முழுவதும் வலி இருக்கும். தலையை அமுக்குவது அல்லது அழுத்துவது போல தோன்றும். தலையைச்சுற்றி வலி இருக்கும். தசைகள் மிதமாகவோ கடுமையாகவோ சுருங்கும்.தலையில் இரத்த ஓட்டம் குறையும். வேதியியல் கழிவுகள் தசைகளில் படிந்து தலைவலி ஏற்படும். சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை வலி இருக்கலாம். படபடப்பு, கழுத்து வலி, வாந்தி, பேச்சு தடுமாற்றம், மதமதப்பு, மனநிலை மாற்றங்கள், குழப்பம், மந்தம், கிறுகிறுப்பு, மயக்கம், சோர்வு, எடை அதிகரிப்பு, குமட்டல், பசி, மூக்கடைப்பு, காதுகளில் ஒலி, பயத்தின் உணர்வுகள், வயிற்றுப்போக்கு , குளிர்ந்த கை மற்றும் கால்கள், தாகம், வயிற்று வலி, கை  கால்களில் பலவீனம், குடல் சத்தம், இரத்த அழுத்தம் மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.


சிகிச்சை :




வராமல் தடுக்கும் மாத்திரைகள் இரவு மட்டும் 20 நாள் 90 நாள் வரை தேவைப்படலாம் .


தலைவலி வந்தால் சாப்பிடும் மாத்திரைகள் தனியாக வைத்து தேவைப்பட்டால் உட்கொள்ளலாம்.


நடைமுறை வாழ்க்கை மாற்றங்கள்.


 1. உணவு


    வேளை தவறாமல் உணவு உட்கொள்ளவும், எளிதில் ஜீரணமாகும் காய்கறிகள், பழங்கள் சேர்க்கவும். எண்ணெய் பொருட்களை தவிர்க்கவும். படுக்கைக்கு செல்லும் 3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவு உட்கொள்ளவும். கொழுப்பு அல்லது ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் உணவுகளைத் தவிர்க்கவும். பாரம்பரிய உணவுகள் உட்கொள்வது நல்லது பச்சைப் பயறு, கொண்டை கடலை, பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகள் முளைக்க வைத்து சாலடாக சாப்பிடுவது நல்லது.






 2. தண்ணீர் :

    தினமும் 2 லீட்டர்  (10 டம்ளர் ) தண்ணீர் குடிக்கவும். (ஜீரக தண்ணீர் பித்த தலைவலியை குறைக்கும்).


 3. உறக்கம்





    7 மணி நேரம் சரியான உறக்கம் தேவை, (உறக்கம் சரியாக இல்லை என்றாலும், 8 மணி நேரமாவது ஓய்வு தேவை ).

வலி உண்டாக்கும் காரணம் கண்டுபிடித்து அதை தவிர்க்கவும், உதாரணமாக சில உணவு வகைகள், (சாக்லேட்,பால் கலந்த பொருட்கள், காப்பி, வாழைப்பழம், எலுமிச்சை, உள்ளி,  முருங்கைக்காய் ) வாசனை பொருட்கள் .

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து வெவெதுப்பான தண்ணீரிலே குளிக்கலாம்.

இஞ்சி மேல்தோல் சீவி சின்ன துண்டுகளாக வெட்டி (50 கிராம் தேனில் 25 கிராம் இஞ்சி) தேனில் போட்டுவைத்துமறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இரு துண்டு இஞ்சி 1 கரண்டி தேனுடன் உட்கொள்ளலாம்.

நேர் மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது தலைவலியை தடுக்கும். மூச்சு பயிற்சி, தியானம் பலன் தரலாம்.

. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.

. வெயிலில் அலைவதை தவிர்க்கவும். அல்லது குளிர்ச்சியான கண்ணாடி அணியலாம்.



வலி மாறாவிட்டால் என்ன செய்வது :


    21 நாட்களுக்குள் வலி திருப்திகரமாக மாறாவிட்டால் ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே தேவைப்படலாம்.


  சரியான தோரணை                             சரியான தோரணை                                             

         


          தவறான தோரணை சரியான தோரணை   தவறான தோரணை


   






டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை

தேங்காப்பட்டணம் ரோடு, வெட்டுமணி மார்த்தாண்டம்.

தொடர்பு                  : 7200204030

பார்வை நேரம்  : 9.00 a.m to 8.00 p.m

வலைதளம்   : www.suresheyehospital.in

தலைவலி கிளினிக்

பார்வை நேரம் : 9.00 a.m to 2.00 p.m &

                            4.00 p.m to 7.00 p.m

வலைதளம்    : tamilsuresh.com

        










            


Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps