டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை
தேங்காய்பட்டணம் ரோடு, வெட்டுமணி, மார்த்தாண்டம்
PH: 7200204030
கண் பார்வை கோளாறு ஏற்படும் போது நாம் மருத்துவரை நாடுகிறோம். கண்ணாடி அல்லது கண்ணினுள் லென்ஸ் அணிகிறோம். லேசிக் சிகிச்சை செய்கிறோம். முக்கியமாக செய்ய வேண்டியதை மறந்து விடுகிறோம். கண்களுக்கும், கண் தசைகளுக்குமான பயிற்சிகள் நாம் செய்வதில்லை.
கீழே 10 பயிற்சிகள் ஒவ்வொன்றும் 2 நிமிடங்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் செய்தால் பலன் பெறலாம்.
கண்களை வேகமாக மூடித்திறக்க வேண்டும் . மூடும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். ஒரு நொடி, கண்களை திறக்கும் போது மூச்சை வெளிவிட வேண்டும். இது ஒரு நொடி, முதலில் 30 முறை செய்து பின்னா் 60 முறை (2 நிமிடம்) செய்யலாம்.
இந்த பயிற்சி கண்ணுக்கும் கண் நரம்புகளுக்கும் நல்ல ஓய்வையும் , இரத்த ஓட்டத்தையும் கொடுக்கிறது.
கண்களை முதலில் கொஞ்சமாக மூடி, பின் இறுக்கமாக மூடி, மெதுவாக திறக்க வேண்டும். கண்களை இறுக்கமாக மூடும் போது மூச்சை உள்ளே இழுக்கவும், கண்களை திறக்கும் போது மூச்சை வெளியே விடவும். மூச்சை உள்ளே இழுக்கும் நேரம் 5 நொடி. வெளியே மூச்சை விடும் நேரம் 5 நொடி. 6 முறை தொடர்ச்சியாக செய்த பின்பு 12 முறை செய்யலாம். கண்களுக்கு இரத்த ஓட்டத்தை கூட்டவும் நரம்புகள் புத்துணர்வு பெறவும் இது உதவும்.
இடது கை உள்ளங்கையால் இடது கண்ணை மூட வேண்டும்,வலது கை உள்ளங்கையால் வலது கண்ணை மூட வேண்டும். பின்னர் கடிகார முள் போல 5 முறை சுழற்றவும். கடிகார முள் எதிர் திசையில் 5 முறை சுழற்றவும்(10 வினாடி) ஒவ்வொரு முறையும் 10 வினாடி செய்யலாம். கவனத்தை கண்களில் வைக்கவும். சாதாரணமாக சுவாசம் விடவும். இதை 6 முறை செய்யவும். கண் தசைகளுக்கு புத்துணர்ச்சியும் கண் இரத்த ஓட்டம் சீராக்கவும் இந்த பயிற்சி பயன்படும்.
கண்களை எல்லா திசைகளிலும் திரும்ப செய்யும் பயிற்சி இது,
கண்களை வலதுபுறம் திருப்பவும். பின் இடது புறம் திருப்பவும். 5 முறை செய்யலாம். பின் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், 5 முறை செய்யலாம். மேலே வலது காது (வலது கண்) தொடங்கி கீழே இடது காது (இடது கண்) என 5 முறையும் மேலே இடது காது (இடது கண்) தொடங்கி கீழே வலது காது (வலது கண்) என 5 முறை செய்யவும். பின் கண்களை கடிகார முள் போல பின்னாலே இடம் இருந்து வலது புறமும், வலம் இருந்து இடது புறமும் சுழற்றவும். பின்னர் கடிகார முள் எதிர் திசையில் சுழற்றவும். ஒவ்வொரு பயிற்சியும் 5 முறை செய்யவும். சீரான சுவாசம் தேவை. சாதாரணமாக 2 முதல் 5 வினாடி வரை ஒவ்வொரு பயிற்சியும் செய்யலாம், கண் தசைகள் உறுதி அடைய இது உதவும்.
கண்களை திறந்து வைத்து நேராக 5 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை கண் சிமிட்டாமல் 10 முதல் 15 நொடி பார்க்க வேண்டும்.
பின்னர் 10 அடி தூரத்தில் வைத்து கண் சிமிட்டாமல் 10 முதல் 15 நொடி பார்க்க வேண்டும்.
சீரான சுவாசம் தேவை. 2 நிமிடம் செய்யலாம். அதாவது 4 முறை செய்யலாம். கண்ணின் உட்புற தசைகளில் இரத்த ஓட்டம் மற்றும் பயிற்சி இதனால் கிடைக்கிறது.
கையில் பென்சில் ஒன்று எடுத்துக்கொள்ளவும். பென்சிலும் கண்ணும் ஒரே வரிசையில் வரும்படி பென்சிலை கையில் தள்ளி பிடிக்கவும் முதலில் கண்களை திருப்பி மூக்கின் நுனியை பார்க்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்து (5 நொடி) மெதுவாக விடவும் (5 நொடி) இனி கண்களை திருப்பி பென்சிலை பார்க்கவும். மறுபடியும் ஒரு முறை மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பின் துாரத்தில் தெரியும் (6 மீட்டருக்கு மேல்) ஒரு பிம்பம் (மரம், கட்டிடம்) பார்க்கவும். மூச்சை ஒரு முறை இழுத்து விடவும் 4 முறை செய்யவும்.
கண்ணுக்குள் உள்ள தசைகளுக்கு பயிற்சியும். இரத்த ஓட்டம் பெற இப்பயிற்சி உதவும். கண் பார்வை நரம்புகள் பயன்பெறும்.
கண்களை மூடி கண்களை சுற்றியுள்ள பகுதிகளை இரண்டு விரல்களால் மசாஜ் செய்யவும்.
ஆள்காட்டி மற்றும் நடு விரலை வைத்து கடிகார முள் திசையில் 5 முறையும் மறு திசையில் 5 முறையும் அழுத்த வேண்டும்.
கண்ணை சுற்றி உள்ள தசைகளுக்கு இது நல்ல பயிற்சி. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
முழு இருட்டான இடத்தில் கண்களை மூடி 2 நிமிடம் இருக்கவும். இருட்டான இடம் இல்லை என்றால் கண் மாஸ்க் அல்லது உள்ளங்கையால் அழுத்தி மெதுவாக மூடி செய்யலாம். கண் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
கண்களை மூடி 2 நிமிடம் இருந்த பின் குளிர்ந்த தண்ணீரை மூடிய கண்களின் வெளிப்புறத்தில் படும்படி 7 முறை தண்ணீரை ஊற்றி கழுகவும்.
தினமும் 4 முறையாவது கண்களை மூடி வெளிப்புறமாக குளிர்ந்த தண்ணீரால் கழுகுவது நல்லது.
பயிற்சி எவ்வளவு முக்கியமோ உணவும் மிக முக்கியம். ஆரஞ்சு பழம், கேரட், ஆல்மண்ட் தினமும் உபயோகிக்கவும். கண்களுக்கு தேவை Vitamin A, D, C, E and Zinc, உள்ளியும், வெள்ளைப்பூடும், மீன், முட்டை சோ்ப்பது நல்லது.
{{r.reply}}
Your comment was submitted for review. It will start display once it was approved by Admin
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps
Comments