ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்தால் ஒரு பக்க தலை மட்டும் வலிக்கும் சிலமணி நேரம் முதல் 3 நாட்கள் வரை தொடரும். சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும்.
|
• அதிர்ச்சி
• மன அழுத்தம்
• கோபம்
• பதற்றம்
• பரம்பரை
• அதிக உடற்பயிற்சி
• அறுவை சிகிச்சை
• விபத்து காயங்கள்
• பிரகாசமான ஒளி (வெயிலில் அலைச்சல் )
• புகை
• கால நிலை மாற்றங்கள்
• அதிக சத்தம்
• மருந்துகள் (கருத்தடை மாத்திரைகள் )
• வேலைப்பழு
• களைப்பு
• மாதவிடாய் நேரம் (ஈஸ்ரோஜன் குறைவு )
• சில உணவு வகைகள்
• போதிய உணவின்மை.
• குடி பழக்கம்
• நீர் சத்து குறைபாடு
• அதிக நேர பயணம்
• தூக்கமின்மை
விண் விண் என்று துடிப்புடன் கூடிய வலி. ஒரு பக்கம் மட்டும், படபடப்பு, கழுத்து வலி, வாந்தி, கண்ணில் அலை அல்லது நட்சத்திரம் தோன்றல், பேச்சு தடுமாற்றம், மதமதப்பு, மனநிலை மாற்றங்கள், குழப்பம், மந்தம், கிறுகிறுப்பு, மயக்கம், சோர்வு, எடை அதிகரிப்பு, குமட்டல், பசி, மூக்கடைப்பு, காதுகளில் ஒலி, பயத்தின் உணர்வுகள், வயிற்றுபோக்கு, குளிர்ந்த கை மற்றும் கால்கள், தாகம், வயிற்று வலி, கை கால்களில் பலவீனம், குடல் சத்தம், இரத்த அழுத்தம் மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.
வராமல் தடுக்கும் மாத்திரைகள் இரவு மட்டும் 20 நாள் 90 நாள் வரை தேவைப்படலாம் .
தலைவலி வந்தால் சாப்பிடும் மாத்திரைகள் தனியாக வைத்து தேவைப்பட்டால் உட்கொள்ளலாம்.
நடைமுறை வாழ்க்கை மாற்றங்கள்.
வேளை தவறாமல் உணவு உட்கொள்ளவும், எளிதில் ஜீரணமாகும் காய்கறிகள், பழங்கள் சேர்க்கவும். எண்ணெய் பொருட்களை தவிர்க்கவும். படுக்கைக்கு செல்லும் 3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவு உட்கொள்ளவும். கொழுப்பு அல்லது ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் உணவுகளைத் தவிர்க்கவும். பாரம்பரிய உணவுகள் உட்கொள்வது நல்லது .பச்சைப் பயறு, கொண்டை கடலை, பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகள் முளைக்க வைத்து சாலடாக சாப்பிடுவது நல்லது.
தினமும் 2 லீட்டர் (10 டம்ளர் ) தண்ணீர் குடிக்கவும். (ஜீரக தண்ணீர் பித்த தலைவலியை குறைக்கும்).
7 மணி நேரம் சரியான உறக்கம் தேவை, (உறக்கம் சரியாக இல்லை என்றாலும், 8 மணி நேரமாவது ஓய்வு தேவை ).
வலி உண்டாக்கும் காரணம் கண்டுபிடித்து அதை தவிர்க்கவும், உதாரணமாக சில உணவு வகைகள், (சாக்லேட், பால் கலந்த பொருட்கள், காப்பி, வாழைப்பழம், எலுமிச்சை, உள்ளி, முருங்கைக்காய் ) வாசனை பொருட்கள் .
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து வெவெதுப்பான தண்ணீரிலே குளிக்கலாம்.
இஞ்சி மேல்தோல் சீவி சின்ன துண்டுகளாக வெட்டி (50 கிராம் தேனில் 25 கிராம் இஞ்சி) தேனில் போட்டு வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இரு துண்டு இஞ்சி 1 கரண்டி தேனுடன் உட்கொள்ளலாம்.
நேர் மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது தலைவலியை தடுக்கும். மூச்சு பயிற்சி, தியானம் பலன் தரலாம்.
மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.
வெயிலில் அலைவதை தவிர்க்கவும். அல்லது குளிர்ச்சியான கண்ணாடி அணியலாம்.
21 நாட்களுக்குள் வலி திருப்திகரமாக மாறாவிட்டால் ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே தேவைப்படலாம்.
சரியான தோரணை சரியான தோரணை
தவறான தோரணை சரியான தோரணை தவறான தோரணை
டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை தேங்காப்பட்டணம் ரோடு வெட்டுமணி, மார்த்தாண்டம். தொடர்பு :
7200204030 பார்வை நேரம் : 9.00
a.m to 8.00 p.m வலைதளம்
:
www.suresheyehospital.in |
தலைவலி கிளினிக் பார்வை நேரம்; :
9.00 a.m to 2.00 p.m & 4.00
p.m to 7.00 p.m வலைதளம் : tamilsuresh.com
|
{{r.reply}}
Your comment was submitted for review. It will start display once it was approved by Admin
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps
Comments