இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை (Occlusion Therapy):
இந்த சிகிச்சையில் பார்வையுள்ள கண்ணை அடைத்து அல்லது மூடி வைத்து பார்வை குறைந்த கண்ணுக்கு வேலை கொடுக்கப்படும். இரண்டு கண்களிலும் சமமான பார்வையை ஏற்படுத்தவும் கண்களின் அசைவுகளை மேம்படுத்தவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அதிக பார்வையுள்ள கண்ணுக்கு ஒட்டுப் போட்டு மறைத்து விடுவது சோம்பற் கண்ணைப் பலப்படுத்த உதவி செய்யும். எவ்வளவு அடிக்கடி மற்றும் எவ்வளவு காலத்துக்கு ஒட்டுப்போடுதல் தேவைப்படும் என்பது பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கமளிப்பார். கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக மருத்துவர் அடிக்கடி உங்கள் பிள்ளையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிருக்கலாம்.
சில சமயங்களில் வலிமையான கண்ணிலிலுள்ள பார்வையை மங்கச் செய்வதற்காக மருத்துவர் விசேஷ கண் சொட்டு மருந்தை எழுதிக் கொடுக்கலாம். இது சோம்பற் கண்ணை மேலும் அதிகமாக வேலை செய்யத் தூண்டும்.
கண் பயிற்சி
சினாப்டோபோர் :
மாறுகண் உள்ள குழந்தைகளுக்கு இந்த கருவி கண் தசை சமநிலை மாற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க உதவும். கண் நரம்பு பலவீனமாக இருந்தால் (Loss of Binocular Vision) இந்த கருவியின் உதவியுடன் அதை சரிபடுத்தலாம்.
(VIRTUAL REALITY)மெய்நிகர் உண்மையிலிருந்து கிடைக்கும் பார்வை பலன்கள்:
கண் பராமரிப்பு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ், கண் ஒருங்கிணைப்பு, கை-கண் ஒருங்கிணைப்பு, ஆழமான உணர்தல் மற்றும் எதிர்வினை நேரத்தை மேம்படுத்த வி ஆர் (VIRTUAL REALITY) ஹெட்செட் பயன்படுத்தப்படலாம்.கூடுதலாக, வி ஆர் (VIRTUAL REALITY) ஹெட்செட்டை முறையாகப் பயன்படுத்தினால், சோம்பேறிக் கண் (ஆம்பிலியோபியா) உள்ள ஒருவருக்கு சிறந்த பார்வைக் கூர்மையை உருவாக்க முடியும்.
அறுவை கிகிச்சை :
மாறு கண்.
கண்ணில் படலம்.
இமை இறக்கம்.
கண்களில் வேறு நோய்கள்.
அறுவைச் சிகிச்சை அவசியமானால், செயல் முறைகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறுவார். உங்களுக்கு கேள்விகள் அல்லது கவலைகளிருந்தால் உங்கள் பிள்ளையை பார்வையிட்ட மருத்துவரை அணுகுங்கள்.
Comments