கண்புரை என்றால் என்ன?
நமது விழியில் உள்ள லென்ஸ் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. விழியில் மற்றும் உடலில் நடக்கும் பல்வேறு வேதி மாற்றங்களால் லென்ஸ் தனது ஒளி புகும் தன்மையை இழப்பதைத் தான் கண்புரை என்கிறோம்.
காரணங்கள்:
• வயது முதிர்ச்சி.
• திசுக்களில் மாற்றங்கள்.
• ஊதாக் கத்திர்வீச்சு.
• வைட்டமின்கள், புரதசத்து குறைவு.
• கண்ணில் காயம்.
• பிறவிக் குறைபாடு.
• சர்க்கரை வியாதி.
• சில மருந்துகள் - ஸ்ட்ராய்ட்அறிகுறிகள்.
அறிகுறிகள் :
• மங்கலாக தெரிதல்
• இரண்டாக தெரிதல்
• ஒளிரும் பொருட்களைச் சுற்றி ஒளி வட்டம் தெரிதல்.
• கண்கண்ணாடி எண்ணில் அடிக்கடி மாற்றம்.
பரிசோதனை:
நரம்பு பரிசோதனை :
கண்களின் கருவிழி, விழிலென்ஸ், லென்ஸிற்கு பின்புறம் உள்ள நரம்புப் பகுதிகளைப் பரிசோதிப்பார்.
இந்தப் பரிசோதனையின்போது கண்புரையின் தன்மை, அறுவை சிகிச்சைக்குப் பின் எந்த அளவிற்கு
பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது போன்ற விவரங்கள் கண்டறியப்படும்.
பார்வைத் திறனைக் கண்டறியும் பரிசோதனை:
ஓரிடத்தில் அமரச்செய்து, குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எழுத்துகள்/எண்களைப் படிக்கச் சொல்லி பார்வைத் திறனைக் கண்டறியும் பரிசோதனை இது.
கண்ணில் நீர் அழுத்த அளவைக் கண்டறிதல்:
கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் கண்களில் அழுத்தம் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை - கண் நீர்ப்பை அடைப்பு:
ஒரு சிறிய ஊசியின் மூலம் கண்ணின் பக்கவாட்டில் உள்ள நீர்ப்பைக்குள் நீர் செலுத்தப்படும். நீர்ப்பையில் அடைப்பு இருந்தால், நீர் வெளியே வந்துவிடும். இல்லையெனில், நீரானது நீர்ப்பை வழியாக தொண்டைக்கு வந்துவிடும். அடைப்பு இருந்தால், உள்ளே கிருமிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனை செய்யப்படும். கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான எதிர்ப்பு சக்தி மருந்துகளைக் குறிப்பிட்ட நாட்கள் உட்கொண்ட பின்னரே அறுவை சிகிச்சை செய்யப்படும் அல்லது கண் நீர்ப்பை அறுவை சிகிச்சை முதலில் செய்யப்படும். பத்து முதல் பதினைந்து நாட்களுக்குப் பின்பு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும்.
பரிசோதனை - இரத்த அழுத்தம் :
உடலில் இரத்த அழுத்தம் எந்தளவிற்கு உள்ளது என்பதை பரிசோதிப்பது நல்லது. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய இயலாது. பொது மருத்துவர் அறிவுரையின்படி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர் அடுத்த நாளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நோயாளி அனுமதிக்கப்படுவார்.
பரிசோதனை - சர்க்கரை அளவு:
இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சைக்குப் பின் காயம், விரைவில் ஆறும். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும்.
பொது மருத்துவரின் ஒப்புதல்:
ஏதேனும் உடல்நல பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு இ.சி.ஜி பரிசோதனை செய்யப்பட்டு உடல்நல மருத்துவரின் ஒப்புதல் கிடைத்த பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும்.
ஏ-ஸ்கேன் பரிசோதனை:
செயற்கை லென்ஸ், எந்தப் பவரில் பொருத்த வேண்டும் என்பது ஏ-ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கண்டறியப்படும்.
சிகிச்சை:
பாதிக்கப்பட்ட லென்ஸ் லேசர் கதிர் உதவியுடன் அகற்றப்பட்டு புதிய லென்ஸ் கண்களுக்குள் வைக்கப்படும்.
கண்புரைக்கு எப்போது லென்ஸ் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்:
நோயாளி எப்போது தனது பார்வை மங்கலாக உள்ளது என்பதை உணர்கிறாரோ அப்போதே லென்ஸ் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
கண்புரை முற்றும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கண் உள்விழி லென்ஸ் வகைகள்:
அக்ரிஃபோல்ட்:
• சமரசமற்ற துரப் பார்வை .மடக்கு தன்மை - சிறிய துவாரம் வழி உள்ளே வைக்கலாம்.
• ஈரத்தன்மை- பார்வை தெளிவாக தெரியும்.
• கூர்மையான விளிம்பு- ஜவ்வு வளராது, செல் ஊடுருவல் குறையும்.
• வளைந்த அமைப்பு - கூச்சம் குறையும்
ஐகிரில்:
கழுகுப் பார்வை அல்லது மிக சிறந்த ஒளியியல் தன்மை.
அகிரோல் - இந்தியன்:
• நீர் வெறுப்பு சக்தி, அழுக்கு ஒட்டாது
• கதிர்வீச்சு பாதுகாப்பு .
அல்காண் -3பி :
• நீண்ட கால பார்வை தெளிவு
• அமெரிக்காவில் செய்யப்பட்ட லென்ஸ் 3 பாகங்கள் உண்டு.
• கதிர்வீச்சு பாதுகாப்பு.
அல்காண் சிங்கிள் பீஸ் :
• அனைத்து ஒளி நிலைகளிலும் தரமான பார்வை.
• ஒரு பாகம் உறுதியாது
• இரவு பார்வை தெளிவாக தெரியும்.
ஆல்காண் கிளாரியாண்:
• நீண்ட கால பார்வை தெளிவு
• அழுக்கு படியும் (PCO) வாய்ப்பு குறைவு.
• குறைந்த வெளிச்சம்- சிறந்த பார்வை.
• சிறந்த வண்ண உயர்வு.
• ஒளியியல் கோள விலகலை குறைக்கும் கூச்சம் குறைவு.
அலகாண் - ஐக்யூ :
• கண் கூச்சத்தில் இருந்து வேகமான விடுதலை.
• 21 வயதான மனித லென்ஸை பிரதிபலிக்கும் வகையில் வடிவம்.
• அமெரிக்காவில் செய்யப்பட்ட லென்ஸ்.
• நிறங்களின் மாறுபாட்டை உணரும் திறன் சிறப்பாக உள்ளது.
• கம்ப்யூட்டர் செல்போன் கதிர் வீச்சு பாதுகாப்பு.
• இரவு பார்வை தெளிவாக தெரியும்.
• கதிர்வீச்சு பாதுகாப்பு - ஊதாகதிர்.
• வெளிச்சத்திலிருந்து இருளில் வரும் போது வேகமாக பார்க்க முடியும்.
• எல்லா வெளிச்ச நிலைமையிலும் கூர்மையான பார்வை.
டோரிக் (அல்கான்) லென்ஸ் :
சிதறல் பார்வை சரிசெய்யும்.
• ரெஸ்டோர்
• பானோப்டிக்
• பானோப்டிக் டாரிக்
மல்டிஃபோக்கல் - (அமெரிக்கன் - அல்காண் ):
• ரெஸ்டோர்
• பானோப்டிக்
• பானோப்டிக் டாரிக்
மல்டிஃபோக்கல் லென்ஸ்கள்:
• பல தரப்பட்ட தூரங்களில் நன்றாக பார்க்கலாம்.
• அருகில் எழுத்து படிக்க கண்ணாடி தேவைப்படாது.
ட்ரை ஃபோக்கல்:
கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் இடைநிலைப் பார்வையை சரி செய்கின்றன. கண்ணாடி தேவை மிகமிக குறைவு .
பானோப்டிக் டாரிக்:
• ட்ரை ஃபோக்கல் - எல்லா பார்வையும் சரி செய்யும்.
• சிதறல் பார்வையையும் சரி செய்யும்.
நுண்ணோக்கி:
நாங்கள் பயன்படுத்துவது உலகத்திலுள்ள மிக முன்னோடி ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட சைஸ் லேமுரா ஐ நுண்ணோக்கி.
நுண்ணோக்கி தன்மைகள்:
• மிக அதிக உருப்பெருக்கம்
• நம்ப முடியாத உயர் தெளிவுத் திறன்.
• அதிக ஆழத்தை ஆராய முடியும்.
• எளிமை மற்றும் அதன் வசதி.
• கலவை ஒளி நுண்ணோக்கி ஒப்பீட்டளவின் சிறியது, எனவே இது பயன்படுத்த எளிதானது மற்றும் சேமிக்க எளிதானது.
• லென்ஸ்கள் காரணமாக, கலவை ஒளி நுண்ணோக்கிகள் மாதிரிகளல் அதிக அளவு விவரங்களை வெளிப்படுத்த முடியும்.
பாக்கோ எமல்சிமிகேஷன் கருவி - Constellation vision System:
நாம் உபயோகிப்பது அமெரிக்கா நிறுவனமான அல்காண் தயாரித்த காண்ஸ்டல்லேஷன் ( Constellation - Alcon) சிஸ்டம் என்ற மிஷின் இது உலக முன்னணி பெக்கோ மெஷின்களில் ஒன்று .
• 1மிமீ கிறல் மூலம் சிகிச்சை செய்யலாம். அதாவது குறைந்த பட்ச (MICS) ஊடுருவும் கண்புரை அறுவை சிகிச்சை.
• அறுவை சிகிச்சை பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக மாற்றுகிறது.
• சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துகிறது .
• நல்ல அழுத்தப்பட்ட திரவ கட்டுப்பாடு.
• மேம்பட்ட அறுவை சிகிச்சை தளங்களின் பயன்பாடு.
• அதி நவீன கண்புரை செய்ய அனுமதிக்கிறது.
• பல்வேறு திரவ பயன்பாட்டை ஆதரிக்கிறது.
• பாக்கோ சக்தியின் பயன்பாட்டை குறைக்கிறது.
• கண்ணுக்குள் முன் மற்றும் பின் அறைப் பகுதியை எளிதாக கையாளும் வாய்ப்பை மருத்துவர்களுக்கு வழங்குகிறது.
• தேவைக்கேற்ப சிறந்த லென்ஸ் பொருத்தலாம்.
வராமல் தடுக்கும் முறை உண்டா?
அறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது. ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வரும்.
கண் அறுவை சிகிச்சை / லென்ஸ் பொருத்திய பின் செய்ய வேண்டியவை:
1. வீட்டிற்கு சென்ற பின் கட்டை கீழிருந்து மேல் உயர்த்தி மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உபயோகிக்கவும் .
2. அடுத்த நாள் காலை மருத்துவமனைக்கு வரவும். கண்ணில் கட்டு இருக்க வேண்டும்.
3. அறுவை சிகிச்சை செய்த கண்ணை கசக்கவோ, துணிகொண்டு துடைக்கவோ கூடாது. பஞ்சை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆறிய பின் பஞ்சை பிழிந்து கண்ணின் வெளிப்புறம் பழுப்பு இல்லாமல் தேவைப்பட்டால் துடைக்க வேண்டும்.
4. பகலில் 45 நாள் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும். 20 நாட்கள் இரவில் கண் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும்.
5. மருந்து ஊற்றிக் கொண்ட பின் 5 நிமிடம் கண்களை மூடிக் கொள்ளவும். மூன்று வாரங்களுக்கு கண்ணில் சிவப்பும், சிறிதளவு நீரும் வரலாம், பயப்பட வேண்டாம்.
6. மருந்துகளை உபயோகிப்பதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
7. மருந்துகளை அறுவை சிகிச்சை செய்த கண்ணிற்கு மட்டும் உபயோகிக்கவும். மருந்து ஒரு சொட்டு மட்டும் கண்ணில் விடவும். மருந்துகளிடையே 5 நிமிட இடைவெளி அவசியம்.
8. 10 நாட்கள் கழித்து தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். அரப்பு,சீகக்காய் உபயோகிக்க வேண்டாம். ஆறுகள், வாய்க்கால், குளங்களில் முங்கி குளிக்க கூடாது.
9. வழக்கமான உணவு உட்கொள்ளலாம். கடினமாக கடிக்கக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
10. பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை 1 மாதகாலம் உபயோகிக்க வேண்டாம்.
11. சுமார் 4 வாரங்களுக்கு தூசி, புகை மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். T.V. 7 நாட்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம்.
12. ஆண்கள் 7 நாட்கள் கழித்து சவரம் செய்து கொள்ளலாம்.
13. நீங்கள் இரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோயுள்ளவர்களாக இருந்தால் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த உணவை மட்டும் உட் கொள்ளவும்.
14. ஒரு வாரம் கழித்து நீங்கள் சிறிது தூரம் நடக்கலாம்.
15. மருத்துவரின் ஆலோசனையில்லாமல் கம்ப்யூட்டர் மற்றும் கடினமான வேலைகள் செய்ய வேண்டாம். பழு உள்ள பொருட்கள் தூக்க வேண்டாம். (பத்து கிலோவுக்கு மேல்)
16. தேவைல்லாத பயணம், உடற்பயிற்சி ஆகியவற்றை ஒரு மாதகாலம் வரை தவிர்ப்பது நல்லது.
17. சிறு குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
18. பவுடர், கண்மை, முதலியவற்றை கண்அருகாமையில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
கேள்வி பதில் :
கண்புரை அகற்றிய பின் மீண்டும் வளருமா?
உண்மை நிலை: இல்லை: அறுவை சிகிச்சைக்கு பின் நாளடைவில் கண்புரை நோயாளிகள் வேறுவித இரண்டாம் நிலை கண்புரையால் பாதிக்கப்படலாம். புதிய செயற்கை லென்ஸை தாங்கியிருக்கும் சதைப் பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால, பார்வை தெளிவின்மையை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதை லேசர் கதிர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இந்த எளிய அறுவை சிகிச்சை மூலம், சிறிய குளையை சதைப்பகுதியில் ஏற்படுத்தி, ஒளி புகும் வண்ணம் மருத்துவர் மாற்றியமைப்பார். இந்த சிகிச்சை முறை வலியில்லாதது மற்றும் பதினைந்து நிமிடங்களில் முடியக்கூடியது.
கண்புரை அறுவை சிகிச்சை ஆபத்தானதா?
உண்மை நிலை: கண்புரை அறுவை, தற்போது 95% வெற்றி வாய்ப்புள்ள மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாக இருக்கிறது. எனினும், பிற முறைகள் போலவே இதிலுள்ள சில அபாயங்களை பற்றி உங்கள் மருத்துவரிடம் அறுவை சிகிச்சைக்கு முன் கண்டிபாக கலந்தாலோசிக்கவும்.
கண்புரை நோய் கண் மீது வளர்கிறதா?
உண்மை நிலை: விழி லென்ஸுகளில் மங்கல்தன்மை உண்டாவதையே கண்புரை நோய் என்கிறோம். லென்ஸ் கண்களுக்கு உள்ளே இருக்கிறது, கண்கள் மேலே அல்ல. கண் லென்ஸ் என்பது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் தெளிவாக இருக்குமாறு அமைக்கப்பட்ட நீர் மற்றும் புரத நார்ப்பொருள் அடுக்குகளால் ஆனது. வயதாவதால், சில பகுதிகளில் இந்த புரத நார்ப்பொருட்கள் ஒன்று சேர்ந்துகொள்வதால், தெளிவின்மை ஏற்படுகிறது. நாளடைவில் இந்த பகுதிகள் உறுதியாகி பார்வையை பாதிக்கிறது.
லேசர் கதிர்கள் மூலம் கண்புரையை நீக்க முடியுமா?
உண்மை நிலை: கண்கள் மீது கண்புரை வளர்கிறது என்பது போல, நிறைய மக்கள் அதை லேசர் கதிர்கள் மூலம் நீக்க முடியும் என்று நம்புகிறார்கள். கண்புரை பாதிப்பால் பார்வை தெளிவின்மை லென்ஸின் உட்பகுதிகளில் ஏற்படுவதால், இது சாத்தியமில்லை. கண்புரை அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட லென்ஸ் ‘பேக்கோ ப்ரோப்’ (phaco probe) என்ற கருவி மூலம் நீக்கப்பட்டு, IOL என்று கூறப்படும் புதிய செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது.
முழுவதும் முற்றிய பிறகே கண்புரையை அகற்றமுடியுமா?
உண்மை நிலை: கடந்த காலங்களில் இது உண்மையாக இருந்தது. கண்புரையை முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே அகற்ற் முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நவீன அறுவை சிகிச்சை முறைகளில் கண்புரையை முற்றிய நிலையில் இருக்கத் தேவையில்லை. கண்புரையை பாதிப்பு தோன்றிய உடனே அதை நீக்கினால் பார்வைத் மற்றும் வாழ்க்கைத்தரம் விரைவாக மேம்படும்.
வயதானவர்களுக்கு மட்டுமே கண்புரை பாதிப்பு ஏற்படுமா?
உண்மை நிலை: பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் காணப்பட்டாலும், கண்புரை நோய் வயது குறைந்தவர்களுக்கும் வரும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு, சில வகை மருத்துவமுறைகள், பிற கண் நோய்கள் போன்றவற்றால், கண்புரை நோய் ஏற்படக்கூடும். சில நேரங்களில், ‘கன்ஜெனிட்டல் கண்புரை (congenital cataracts) என்ற வகை பிறப்பிலேயே காணப்படும்.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் குணமாக எவ்வளவு நாட்களாகும்?
உண்மை நிலை: பல நோயாளிகள், அறுவை சிகிச்சை முடிந்த உடனே தங்கள் பார்வையில் மாற்றங்களை காண முடியுமென்றாலும், சிலருக்கு இந்த மாற்றங்கள் சில மாதங்களுக்குப் பிறகு காணப்படும். அறுவை சிச்சைக்குப்பிறகு, மூன்று வாரங்களுக்கு நீங்கள் கனமான பொருட்களை தூக்கவோ, வளைக்கவோ அல்லது கண்களை கசக்கவோ கூடாது. இவை தவிர பிற அன்றாட நடவடிக்கைகளை, கண்கள் மீது வைக்கப்பட்ட பட்டி நீக்கப்படும் மறு நாளிலேயே தொடரலாம்.
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண் கண்ணாடி அணியத் தேவையா?
உண்மை நிலை: கண்களுக்குள் பொருத்தப்படும் செயற்கை லென்ஸின் வகையை பொறுத்து இது மாறுபடும். மோனோஃபோகஸ் லென்ஸ்கள் (monofocal lens) பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு, நடுத்தர தூரங்களில் உள்ளவற்றை படிக்க மற்றும் கண்-னியில் வேலை செய்ய கண்ணாடி தேவைப்படலாம். மல்டிஃபோகஸ் லென்ஸ்கள் பொருத்தப்பட்டவர்களுக்கு அனைத்து குறைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது. உங்களுக்கு இவை பொருந்துமா என்பதை பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். லென்ஸ் தேர்வு பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
{{r.reply}}
Your comment was submitted for review. It will start display once it was approved by Admin
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps
Comments