அறிமுகம்:



 

மெய்போமியன் சுரப்பிகள் என்பது உருமாறிய தோல்மெழுகுச் சுரப்பிகள் ஆகும். இவை மேல்கீழ் இமைகளின் தகடுகளில் காணப்படுகின்றன. மேல் இமைத் தகட்டில் ஏறத்தாழ 30-40 சுரப்பிகளும், கீழ் இமைத் தகட்டில் சுமாராக 20-30 சுரப்பிகளும் உள்ளன. விழிக்கோளத்தின் முன் பரப்பை மூடி இருக்கும் கண்ணீர்த் திரையின் வெளிப்புறக் கொழுப்பு அடுக்கை இந்த சுரப்பிகள் சுரக்கின்றன. இச்சுரப்பிகளின் நாளங்கள் செங்குத்தாக அமைந்துள்ளன. ஒரு ஜெர்மானிய மருத்துவராகிய ஹென்ரிக் மீபோம் (1638-1700) என்பவரின் பெயரிலிருந்து  மெய்போமியன் சுரப்பிகள் என பெயரிடப்பட்டுள்ளன.


மேலும் உலர் கண் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்: வறண்ட கண் (உலர் கண்)


அறிகுறிகள்:




-    கண்ணில் எரியும் உணர்வு

-    தூசி இருக்கும் உணர்வு

-    கண் எரிச்சல்

-    நீர் வடிதல்

-    அரிப்பு

-    இமைச்சிவப்பு

-    இமை விளிம்பில் தடிப்பு 

-    பழுப்பு ஒட்டியிருக்கலாம்





-    கண்சிவப்பு

-    இலேசான ஒளிக்கூச்சம்

-    மங்கலான பார்வை அல்லது பார்வைக் குறைதல்

மண்டலம் சார் நோய்கள் 


முகப்பரு கீழ்க்காணுபவைகளோடு தொடர்புடையதாக இருக்கலாம்:




-    சிவந்து வீங்கிய மூக்கு

-    எளிதாக முகம் சிவத்தல்

-    தோலில் வீங்கிய இரத்தக்குழல்கள் வெளிப்படுதல்

-    எண்ணெய்த் தோல்

-    கொப்புளங்கள்


விளிம்பு இமைவீக்கம் இமையின் ஓரத்தில் காணப்படும்.

ஒன்று அல்லது பல இமைவீக்கங்கள் இருக்கலாம்.

மேல் இமையில் இருக்கும் இமைவீக்கம் விழிவெண்படலத்தை அழுத்துவதால் ஏற்படும் ஒரு வகையான விலகல் பிழை காரணமாகப் பார்வை மங்கல் உருவாகும்.

இமை உள் கட்டி, வலியுடனும் அழற்சி வீக்கத்துடனும் காணப்படும்.


காரணங்கள்:


•  செம்முகப்பரு

•  நீடித்த கண்ணிமையழற்சி

•  எண்ணெய்ச்சுரப்பி மிகை தோலழற்சி


 உலர் கண் நோய்த்தாக்கம்: 





1. ஸ்டேஃபிலோகாக்கல்:


 ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சியில் உலர்கண் காணப்படும். அதுபோல உலர்கண் உள்ளவர்களுக்கு ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சி உருவாகிறது. கண்ணீர் குறைவு படுவதால் கண்ணில் உள்ள லைசோசைம் மற்றும் இம்யுனோகுளோபின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு பாக்டீரியா எதிர்ப்பும் குன்றுவதால் ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.


2. எண்ணெய்மிகைப்பு இமையழற்சி:


மெய்போமியன் எண்ணெய்மிகைப்பு அழற்சியால் மெய்போமியன் சுரப்பிகள் விரிவடைந்து அதிக அளவில் கொழுப்புகளை  உற்பத்தி செய்கிறது. இது இமை விளிம்பில் சிறு எண்ணெய்க் கோளங்களாக அல்லது மெழுகுப் பொருள் திரட்சிகளாக வெளிப்படுகின்றன. கண்ணீர்ப் படலம் அதிக எண்ணெய்ப் பசையுடனும் நுரையுள்ளதாகவும் இருக்கிறது. கடுமையான நேர்வுகளில் சுரப்பு நுரை போன்ற கசிவாக உட்கண் மூலையில் திரண்டு நிற்கும் (மெய்போமியன் நுரை). இதனால் காலையில் முதலில் விழித்தவுடன் எரிச்சல் உணர்வு உண்டாகும்).


ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சியை விட எண்ணெய்மிகைப்பு இமையழற்சியில் அழற்சி குறைவாக இருக்கும். ஆனால் அதிக எண்ணெய் அல்லது பசை செதிள்கள் காணப்படும். சில நோயாளிகளுக்கு மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பும் இருக்கும்.




பொதுவான தனித்துவ அம்சங்கள் வருமாறு:


-    மெய்போமியன் சுரப்பி அடைப்பு

-    கட்டியான கொழுப்பு சுரப்பு

-    சுரப்பித் துளைகளில் அழற்சி

-    துளை அடைபடுவதால் இமைவீக்கம் அல்லது தொற்றால் இமைக்கட்டியும் உண்டாகலாம்.

-    கண்ணீர்ப்படல நிலையாமை

-    பின் இமை அழற்சியால் வெண்படல மாற்றங்கள் ஏற்படலாம்.


பரிசோதனை:



பார்வைத் திறனைக் கண்டறியும் பரிசோதனை:


  


ஓரிடத்தில் அமரச்செய்து, குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எழுத்துகள்/எண்களைப் படிக்கச் சொல்லி பார்வைத் திறனைக் கண்டறியும் பரிசோதனை இது.



பிளவு-விளக்கு பரிசோதனை(slit-lamp):


 

 


    பிளவு விளக்கு என்பது ஒரு உயர்-தீவிர ஒளி மூலத்தைக் கொண்ட ஒரு கருவியாகும். கண்ணிமை, வெள்ளை  விழி , வெள்ளை விழியில் வெளிப்படலம், கருவிழி, இயற்கை  லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதக் கண்ணின் முன் பகுதி அல்லது முன் கட்டமைப்புகள் மற்றும் பின்புறப் பகுதியை ஆய்வு செய்ய விளக்கு உதவுகிறது. இது பல்வேறு கண் நோய்களை  கண்டறிய உதவுகிறது.



ஷிர்மர்ஸ் பரிசோதனை : 




உங்கள் கண்களில் இருக்கும் கண்ணீர் அளவை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது.


 மெய்போமியன் சுரப்பியின் செயல்பாடுகளை கண்டறியும் பரிசோதனை:






 (3 nethra FUNDUS & Anterior Segment Camera).

                                                                                                - டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை 



மெய்போமியன் சுரப்பிகளின் செயல்பாடுகளை கண்டறிய இந்த புகைப்படக் கருவி உபயோகிக்கப்படுகிறது.


சிகிச்சை:


செயற்கை கண் நீர் மருந்துகள்:


a) குறுகிய நேர சிகிச்சை (tears):




இவை 4 மணி நேரம் மட்டும் பயனளிக்கும்.


b) நீண்ட நேர சிகிச்சை (Liquigel):



இவை 6 மணி முதல் 8 மணி நேரம் வரை பயனளிக்கும்.


c) மிக நீண்ட நேர சிகிச்சை (Gel):




12 மணி நேரம் வரை பயனளிக்கும். இரவு படுக்கைக்கு முன் உபயோகிக்கிறது உகந்தது.


2. பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்து களிம்புகள் மாத்திரைகள்(Antibiotic tablets and Ointments):




  

நோயாளிக்கு கண் இமை ஒர புண்கள்  இருந்தால், குழந்தை ஷாம்பூவின் நீர்த்த கரைசலில் பாதிக்கப்பட்ட பகுதியை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.இரவு நேர பயன்பாட்டிற்கு மருத்துவர், பழுப்பு இருந்தால் ஆண்டிபயாடிக் சொட்டுகள் அல்லது களிம்புகளை பரிந்துரைக்கலாம். சில நேரங்களில், டெட்ராசைக்ளின் அல்லது டாக்ஸிசைக்ளின் போன்ற வாய்வழி ஆண்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது.


ஸ்டீராய்டு சொட்டுகள்:




கண் சொட்டுகளை அடிக்கடி பயன்படுத்திய பிறகும், அறிகுறிகள் கடுமையாக இருந்தால், ஸ்டீராய்டு சொட்டுகள் வீக்கத்தைக் குறைக்க உதவும்.


• கண்ணீரைப் பாதுகாத்தல்:




   

கண்களில் இயற்கையான கண்ணீரை நீண்ட நேரம் வைத்திருப்பது வறண்ட கண்களின் அறிகுறிகளைக் குறைக்கும். கண்ணீர் சாதாரணமாக வெளியேறும் கண்ணீர் குழாய்களைத் அடைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். கண்ணீர் குழாய்களை சிறிய சிலிகான் போன்ற பிளக்குகள் மூலம் அடைக்கலாம், தேவைப்பட்டால் அகற்றலாம். அல்லது அறுவை சிகிச்சை மூலம் கண்ணீர் குழாய்களை நிரந்தரமாக மூடலாம். 


• கண்ணீர் உற்பத்தியை அதிகரிப்பது:




கண்ணீர் உற்பத்தியை அதிகரிக்கும் கண் சொட்டு மருந்துகளை கண் மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதும் உதவலாம்.




• கண்ணிமை அல்லது கண் மேற்பரப்பு வீக்கத்திற்கு சிகிச்சை அளித்தல். கண் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டுகள் அல்லது களிம்புகள், சூடான சுருக்கங்கள் மற்றும் மூடி மசாஜ் அல்லது கண்களின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும் கண் இமை கிளீனர்களை பரிந்துரைக்கலாம். பயன்படுத்த வேண்டிய கண் சொட்டுகளின் வகை உலர்ந்த கண்ணின் காரணத்தைப் பொறுத்தது.


• சோதனைகள் கண்ணிமைக்கு பின்னால் உள்ள கண்ணீரின் அளவு, கண்ணீர் படலம் சரியாக இயங்குகிறதா, மற்றும் ஆவியாதல் விகிதம் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.


• சிகிச்சையானது கண்களை நன்கு உயவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அணுகுமுறை அடிப்படை காரணத்தைப் பொறுத்தது.


-    மேற்பூச்சு ஊக்கமருந்து


குறிப்பிடத்தக்க விழி அழற்சி இருக்கும் போது இவை அறிகுறிகளுக்கான நிவாரணம் அளிக்கின்றன.


-  நுண்ணுயிர்க்கொல்லிகளும் ஊக்கமருந்தும் இணைந்த மேற்பூச்சு மருந்து: பாக்டீரியா தொற்றும் அழற்சியும் சேர்ந்து இருந்தால் இது பயன்படும்.



மேற்பூச்சு சைக்ளோஸ்போரின்: கடுமையான இமையழற்சி உடையவர்களுக்கு நுண்கொல்லி மற்றும் ஊக்க மருந்து இணைப்பை விட சிறப்பாக இது நிவாரணம் அளிக்கிறது.


நோய்மேலாண்மை:


சிறு, தெளிவற்ற, அறிகுறிகளற்ற இமைவீக்கம் சிகிச்சை எதுவும் இல்லாமல் தானாகவே சரியாகிவிடும். கண்ணிமை வீக்கத்துக்கு மரபான முறைகளிலும் அறுவையினாலும் சிகிச்சை அளிக்கலாம்.


மரபான சிகிச்சை:


 


1.    வெப்பம், ஒத்தடம் மற்றும் இமை நீவுதல் சுரப்புகளைக் கரைக்க உதவும். கட்டியான கொழுப்பு மென்மையாகி வெளிவரும்.


2.   விழியிணைப் படலத்தின் வழியாக ஊக்கமருந்தை ஊசிமூலம் செலுத்துவது அறுவைக்கு ஒரு மாற்று சிகிச்சையாகும். பலனளிக்காத போது மீண்டும் செய்யப்படலாம்.


3.   எண்ணெய்ச் சுரப்பு மிகு தோலழற்சி, செம்முகப்பரு அல்லது நீடித்த கண்ணிமை அழற்சி ஆகியவற்றுடன் கூடிய தொடர் கண்ணிமை வீக்கம் இருந்தால் முறையாக நுண்ணுயிர்க்கொல்லிகளை முற்காப்பு முயற்சியாக உட்கொள்ளலாம்.


அறுவை மருத்துவம்:


இமைமயிர் உட்சுருளல், கண்ணிமை வீக்கம், கண்ணிமை துருத்தல், இமையுட்பிறட்சி, வெண்படல நோய்கள் போன்ற சிக்கல்களுக்கே அறுவை மருத்துவம் தேவைப்படுகிறது.


1.  அந்த பகுதியை வலியில்லாமல்  செய்ய மருந்தை செலுத்தி கீறல் அல்லது சுரண்டல் முறையில் கண்ணிமை வீக்கத்தின் உட்பொருட்கள் பெரும்பாலும் அகற்றப்படுகின்றன.


2.   தோல்சுரப்பணுப் புற்று சந்தேகத்தை நீக்க, கீறல் மற்றும் சுரண்டலுக்குப் பின் சுரப்பியின் மீதமிருக்கும் விளிம்பில் திசுச்சோதனை செய்யப்படுகிறது.


சிக்கல்கள்:


இமையழற்சியின் சிக்கல்கள் வருமாறு:


  



-    கெராட்டினாக்கம் - தோல் கட்டியாதல் 


-    வெண்படல ஊடுறுவல்


-    வெண்படலப் புண்


-    இமைமயிர் உட்சுருளல்


-    இமைப் பள்ளம்


-    இமையுட்பிறட்சி


-    கண்ணிமைத் துருத்தல்


மண்டலம் சார் நோயையும் திடீர் நோய்த்தாக்கத்தையும் தடுக்க நீண்ட கால இமைச் சுத்தம் பயன் உள்ளதாக இருக்கும்.






Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps