கான்டாக்ட் லென்ஸ்
கண்ணில் உள்ள லென்ஸில் பிரச்சினை ஏற்பட்டால், கண் பார்வையை சரி செய்ய கண்ணாடி போடச் சொல்வார்கள் கண் மருத்துவர்கள். ஆனால், ஒரு சிலர் கண்ணாடியைத் தவிர்க்க விரும்புவார்கள். அப்போது அவர்களுடைய பார்வைக் கோளாறை (Refractive Error) சரிப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு மாற்றுத் பொருள் விழிவெளி லென்ஸ் அல்லது ‘கான்டாக்ட் லென்ஸ்’ (Contact lens).
இது கண்ணில் இருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பிளாஸ்டிக்கினால் ஆனது. கண்ணின் வெளிப்புறத்தில் வட்டமாக, கறுப்பாகத் தெரியும் கருவிழியில் இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு பார்வைக் குறைபாடுகளைச் சரிப்படுத்தி, தெளிவான பார்வையைத் தருகிறது.
விழிவெளி லென்ஸ்
யார் அணியலாம்?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மங்கலான பார்வை மற்றும் அருகில் உள்ள பொருட்களை சிரமத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து பார்வை குறைபாடுகளையும் சரிசெய்ய கான்டாக்ட் லென்ஸ் அணியலாம்.
I. நோக்கத்தைப் பொறுத்து காண்டாக்ட் லென்ஸ்கள்:
1. ஒளியியல் - பார்வை: திருத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. சிகிச்சை -சில நோய்களில் கண்களை பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஆரம்ப நிலைகளில் கண்ணாடி அணியலாம். தீவிரமடைந்த நிலையில் நோயாளிகளுக்கு பிரத்தேயக காண்டாக்ட் லென்ஸ் உபயோகப்படுத்தலாம். இதனால் பார்வை மேம்படுவதுடன் ஒளியைப் பார்த்தால் கண் கூசும் நிலையும் சரி செய்யப்படும்.
வெள்ளை விழியில் மேல் அமரும் அல்லது நிலைபெறும் புதியவகை லென்ஸ் கூம்பு கருவிழி உள்ளவர்களுக்கு பயன்படுகிறது. பார்வை தெளிவாகவும் அணிய வசதியாகவும் இருக்கின்றன. ஆனாலும் சரியான அளவு எடுக்கப்பட்டு லென்ஸ் பொருத்தவில்லை என்றால் சேதம் ஏற்படலாம். அனுபவமிக்க மருத்துவரின் மேற்பார்வை அவசியம். கோபுர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ லென்ஸ் கருவிழி மேல் மிதக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல விதங்களில் பயன்படுகிறது.
3. ஒப்பனை (Cosmetic- Prosthetic):- கண் குறைபாடுகளை மறைக்க (முட்கள், கருவிழி ஒளிபுகாநிலைகள்);
பிராஸ் தெட்டிக் காண்டாக்ட் லென்ஸ்
4. அலங்கார (Cosmetic-Colour):- உங்கள் பார்வையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் கண்களின் நிறத்தை மாற்றவோ அல்லது அதை மேலும் வெளிப்படையாகவோ மாற்ற விரும்பினால், நீங்கள் நிறம் அல்லது சாயம் செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு விருந்துக்கு, பல்வேறு வடிவங்களைக் கொண்ட அலங்கார லென்ஸ்கள் பொருத்தமானவை, அவை பார்வையை பாதிக்காது மற்றும் அலங்காரத்திற்கு மட்டுமே சேவை செய்கின்றன. ஆனால் தினசரி பயன்பாட்டிற்கு, நிறமற்ற லென்ஸ்கள் தேர்வு செய்வது சிறந்தது.
II. பொருட்தன்மை பொறுத்து - காண்டாக்ட் லென்ஸ்கள்:
கடினமானது - அதிக அளவு சமச்சீரற்ற(Astigmatism) பார்வைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த லென்ஸ்கள் உங்கள் மருத்துவர் ஆலோசனைபடி மட்டுமே அணிய வேண்டும். அவை அணியும் போது சிலருக்கு உறுத்தல் ஏற்படலாம்.
மென்மையான - ஹைட்ரஜல் சார்ந்த பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆக்ஸிஜனுக்கு ஊடுருவல் தன்மை குறைவு, எனவே அவற்றை 12 மணி நேரத்திற்கும் மேலாக அணிவது கடினம்.
ஹைட்ரோஜெல் – சிலிகான்: அணிய மிகவும் வசதியான லென்ஸ்கள், அவை காற்றை சுதந்திரமாக செல்ல அனுமதிக்கின்றன, கண்ணின் கருவிழியை எரிச்சலடையச் செய்யாது. ஆனால் அவற்றில் உள்ள சிலிகான் காரணமாக மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
III. பயன்பாடு பொறுத்து – காண்டாக்ட் லென்ஸ்:
* வருடமாற்று லென்ஸ் (Yearly disposable lenses):
ஒரு வருடம் வரை இதனை பயன்படுத்தலாம்.இதன் ஆயுள் காலம் ஒரு வருடம் என்பதால், சற்று தடிமனாக செய்யப்பட்டிருக்கும். முறையாகப் பராமரிக்கப்படாத பட்சத்தில், கண்களில் பாதிப்பு ஏற்படலாம்.தடிமனாக இருப்பதால், கருவிழிகளில் ஆக்ஸிஜன் ஊடுருவது (oxygen permeation) பாதிக்கப்படும்.இது, கண் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
* மாதாந்திர மாற்று லென்ஸ் (Monthly Disposable Lens):
இதன் ஆயுள்காலம், ஒரு மாதம் மட்டுமே.அதற்குள் அது தன் தன்மையை இழந்துவிடும்.இது மெலிதாக இருக்கும் என்பதால், கண் சார்ந்த எந்த பாதிப்புகளும் வராது. சிலர் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் இதனைப் பயன்படுத்திவருவார்கள். அப்படிச் செய்வது, கண் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
* தினசரி மாற்று லென்ஸ் (Daily Disposable Lens):
இது ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.ஆயுள்காலம் குறைவு என்பதால், கண் சார்ந்த எந்தப் பாதிப்புகளும் ஏற்படாது.
* மேற்கூறிய அனைத்து லென்ஸ்களிலும், பல்வேறு நிறங்கள் கொண்டு உருவாக்கப்படும் லென்ஸ், வகைகள் உண்டு (Cosmetic Color contact lens).அழகு தொடர்பாக அதிக அக்கறை எடுத்துக்கொள்பவர்களுக்காக செய்யப்பட்டது இது.
IV. டோரிக் காண்டாக்ட் லென்ஸ்கள்:
டோரிக் காண்டாக்ட் லென்ஸ்கள் சமச்சீரற்ற(Astigmatism) பார்வைக்கு சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட லென்ஸ்கள். பொருத்துவதற்கு சிலிண்டருக்கான சிறப்பு அளவுகள் (measurement) தேவை. கார்னியாவின் வளைவை ஈடு செய்ய இந்த லென்ஸை ஒரு குறிப்பிட்ட நிலையில் அணிய வேண்டும். கருவிழியின் இயற்கையான நிறத்தை மறைக்க வண்ண தொடர்பு லென்ஸ்கள் பயன்படுத்தப்படலாம்.
பரிசோதனை:
பிளவு-விளக்கு பரிசோதனை(slit-lamp):
பிளவு விளக்கு என்பது ஒரு உயர்-தீவிர ஒளி மூலத்தைக் கொண்ட ஒரு கருவியாகும். கண்ணிமை, வெள்ளை விழி , வெள்ளை விழியில் வெளிப்படலம், கருவிழி, இயற்கை லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதக் கண்ணின் முன் பகுதி அல்லது முன் கட்டமைப்புகள் மற்றும் பின்புறப் பகுதியை ஆய்வு செய்ய விளக்கு உதவுகிறது. இது பல்வேறு கண் நோய்களை கண்டறிய உதவுகிறது.
காற்று அழுத்த கருவி (Non Contact Tonometer):
இது கண் பிரஷர் கண்டு பிடிக்க உதவும்.
விழித்திரை புகைப்பட கருவி(fundus camera):
விழித்திரை புகைப்பட கருவி என்பது ஒரு சிறப்பு மிகுந்த சக்தி நுண்ணோக்கி ஆகும், இது விழித்திரை, விழித்திரை இரத்த நாளங்கள், விழித்திரை நடுநரம்பு, விழிப்புள்ளி மற்றும் பின்புற துருவம் (அதாவது fundus) உள்ளிட்ட கண்ணின் உட்புற மேற்பரப்பை புகைப்படம் எடுக்க வடிவமைக்கப்பட்ட புகைப்பட கருவியுடன் உள்ளது.
We use the following lens at Dr. Suresh Eye Hospital:
தேதி :1/04/22 to 31/10/22
* லென்ஸ் பயன்படுத்துபவர்கள்,லென்ஸின் தன்மைக்கேற்ப 8 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே லென்ஸ் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில், பாதிப்பு ஏற்படும்.`Bandage contact lens’ எனப்படும் ஒருவகை லென்ஸ் வகையை மட்டும் இரண்டு மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
* லென்ஸின் ஆயுள்காலம் அறிந்து, அந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* லென்ஸ் அணியும்போதும், கழற்றும்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
* லென்ஸ் கிளீனரைக் (lens cleaner, lens solution) கொண்டு தினமும் லென்ஸைச் சுத்தப்படுத்த வேண்டும்.தண்ணீரில் சுத்தப்படுத்துவது ஆபத்தானது.லென்ஸ் மட்டுமன்றி, லென்ஸ் பாக்ஸையும் (lens case) சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சிலர் நகங்களைக் கொண்டு லென்ஸைக் கழற்றுவார்கள்.அது, தவறான பழக்கம்.கை விரல்களால் மட்டுமே லென்ஸைக் கழற்ற வேண்டும்.
நீண்ட நேரம் ஆபத்து:
நீண்ட நேரம் ஆபத்து காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் அணிந்து வந்தால், கண்களின் விழிவெண்படலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோய்த்தொற்றுகள்:
நோய்த்தொற்றுகள் காண்டாக்ட் லென்ஸ் அணிய விரல்களைப் பயன்படுத்தும் போது, கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கண்களில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் தொற்றி, கண்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடும்.
விழிவெண்படல புண்:
விழிவெண்படல புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தூசிகள் :
தூசிகள் காற்றின் மூலம் தூசிகளானது காண்டாக்ட் லென்ஸ்களில் படிந்து, அதனை சரியாக கவனிக்காமல், கண்களில் பொருத்தினால் அரிப்புக்கள் மற்றும் உறுத்தல்கள் எந்நேரமும் இருந்து, அதனால் கண்களில் இருந்து கண்ணீர் அதிகம் வெளிவரும்.
உலர்ந்த கண்கள் சிலருக்கு, காண்டாக்ட் லென்ஸ் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும்.ஏனெனில் லென்ஸானது கண்களை மூடி, ஆக்ஸிஜனை அடைத்துவிடும்.இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.குறிப்பு நீச்சலில் ஈடுபடும் போது, காண்டாக்ட் லென்ஸை எடுத்துவிட்டு பின் இறங்க வேண்டும்.இதனால் கண்ளில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
லென்ஸ்கள் எவ்வாறு உங்கள் மருத்துவர் தேர்வு செய்கிறார்?
பிற குணாதிசயங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவார். பின்னர், சில லென்ஸ்கள்அணிவதில் நீங்கள் எவ்வளவு வசதியாக இருப்பீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்குப் பொருத்தமான புதிய ஒன்றை முயற்சி செய்யலாம்.
லென்ஸ்கள் சுயமாக தேர்நதெடுப்பது ஆபத்தானது, ஏனேன்றால் சில வியாதிகள் இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் அணியக் கூடாது. அதை உங்களால் கண்டு பிடிப்பது சிரமம். மருத்துவர்கள் ஆலோசனை தேவை.
• ஒவ்வாமை
• கண் நீர் அழுத்த நோய்
• லென்ஸின் சுப்லஸ்ட்டின்
• மாறுகண்
• கண்ணீர் திரவ உற்பத்தியில் தொந்தரவுகள்
• கணுக்கால் கருவியின் வீக்கம்
காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் :
• உங்கள் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியப்படி முறையாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்
• எப்போதும் உங்கள் லென்ஸ்களை கையாளும் முன்பும் பயன்படுத்திய பின்பும் பரிந்துரைக்கப்பட்ட கரைசலில் அலசி உலர வைத்து பாதுகாப்பாக வைக்கவும்.
• மாறிவிடுவதை தவிர்க்க ஒரே லென்ஸை முதலில் பயன்படுத்தவும்.
• பயன்படுத்துவதற்கு முன்பு லென்ஸ் சேதமடையவில்லை என்பதை உறுதி செய்யவும்.
• லென்ஸ் சேதமடைவதை தவிர்க்க கவனமாக கையாளுங்கள்
• ஒப்பனை செய்வதற்கு முன்பே உங்கள் லென்ஸ்களை அணியவும்
• உங்கள் லென்ஸ் பெட்டியை குறைந்தது மாதந்தோறும் மாற்றிவிடவும்
• காலாவதி தேதி முடிந்து விட்ட லென்ஸ்கள் மற்றும் கரைசல்களை தூர போடவும்.
• உங்கள் காண்டாக்ட் லென்ஸ் மருத்துவ நிபுணர் குறிப்பிட்ட லென்ஸ்களை மட்டுமே அணியவும்.
• பரிந்துரைக்கப்பட்ட அணிதல் அட்டவணை மற்றும் மாற்றுதல் அடுக்கு நிகழ்வை கண்டிப்பாக பின்பற்றவும்.
• உங்களிடம் போதிய மாற்று லென்ஸ்கள் அல்லது ஒரு உபரி ஜோடி இருப்பதை உறுதிச் செய்யவும்.
• உங்கள் லென்ஸ்களை நீங்கள் கழற்ற வேண்டியிருக்கும் போது பயன்படுத்த நடப்பு கண்ணாடி ஜோடி ஒன்றை தயாராக வைத்திருக்கவும்.
• லென்ஸ்களை கழற்றி விட்டு பிறகு ஒப்பனையை நீக்கவும்.
செய்யக்கூடாதவைகள்:
• காண்டாக்ட் லென்ஸ் மற்றும் அதன் பெட்டியை தண்ணீரை கொண்டு கழுவ வேண்டாம்
• உமிழ்நீரால் உங்கள் லென்ஸ்களை ஈரப்படுத்தக்கூடாது
• லென்ஸ் தரையில் விழுந்து விட்டால் அதனை திரும்பவும் சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தாமல் கண்ணில் மறுபடியும் லென்ஸ்களை போடக்கூடாது.
• ஒரு லென்ஸ் அழுக்காக தூசு படிந்து அல்லது செய்தமாகி இருந்தால் அதனை அணியாககூடாது
• உங்களுக்கு ஏதாவது mnrsfhpak; இருந்தால் அவற்றை தொடர்ந்து அணியக்கூடாது
• கரைசலை மீள பயன்பாடு அல்லது டாப் அப் செய்யக்கூடாது தூர வீசவும் மற்றும் ஒவ்வொரு தடவை லென்ஸ்களை சேமிக்கும் போது புதிய கரைசலை பயன்படுத்தவும்.
• கரைசலை சிறிய டப்பாக்களுக்குள் ஊற்றக்கூடாது.
• 7 நாட்களுக்கு அதிகமாக பெட்டியில் விடப்பட்ட லென்ஸ்களை சுத்தப்படுத்தாமல் மற்றும் புதிய கரைசலில் அதனை சேமிக்காமல் பயன்படுத்தக்கூடாது.
• உங்கள் மருத்துவ நிபுணர் குறிப்பாக அறிவுறுத்தியிருக்காத பட்சத்தில் உங்கள் லென்ஸ்களுடன் தூங்காதீர்கள்.
• நீங்கள் சுகமில்லாமல் இருந்தால் எந்தவொரு லென்ஸ்களை இரவு முழுவதும் அணியக்கூடாது.
• பெரிய கண்ணாடிகளை அணியாத பட்சத்தில் நீச்சல், உஷ்ண குளியல் தொட்டி அல்லது தண்ணீர் விளையாட்டுகளின் போது உங்கள் லென்ஸ்களை பயன்படுத்தாதீர்கள்.
• குளிக்கும் போது உங்கள் கண்களை நீங்கள் இறுக்கமாக மூடியிருப்பீர்கள் என்றால் தவிர உங்கள் லென்ஸ்களை அணியக்கூடாது.
• உங்கள் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தல் இல்லாமல் நீங்கள் கரைசலை மாற்றக்கூடாது.
• உங்கள் காண்டாக்ட் லென்ஸ் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின்றி கண் சொட்டு மருந்துகள் எதையும் பயன்படுத்தாதீர்கள்
• காண்டாக்ட் லென்ஸ்களை பகிரக்கூடாது அல்லது உங்கள் மருத்துவ நிபுணர் குறிப்பிடாத லென்ஸ்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது.
• உங்களுக்கு கண் ஒவ்வாமை எதுவும் இருந்தால் நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிவதை நிறுத்தி விட்டு மற்றும் உங்கள் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
{{r.reply}}
Your comment was submitted for review. It will start display once it was approved by Admin
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps
Comments