சிகிச்சை:-

 

⚫ கண்ணாடி

⚫ காண்டாக்ட் லென்ஸ்

⚫ லேசிக்கண்ணாடி: கண்ணாடி தேர்வு செய்வது எப்படி: 

• கண்ணாடியால் ஆன லென்ஸ்களையும் மெட்டலில் ஆன ஃபிரேம்களையும் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது உடையும் வாய்ப்புகள் உள்ளன. அவை உடையும்போது அவற்றின் கூர்மையான பாகங்கள் கண்களில் காயத்தை ஏற்படுத்தலாம்.

• பிளாஸ்டிக் கண்ணாடி வாங்கித் தருவது நல்லது. பிளாஸ்டிக்கினால் ஆன லென்ஸ்கள் மற்றும் ஃபிரேம்கள் எளிதில் உடையாது; பாதுகாப்பானது.

• குழந்தைகள் அணியும் கண்ணாடியின் பவர் 6 மாதத்திற்கு ஒரு முறை மாறலாம். கண்ணாடியை அடிக்கடி மாற்றும் தேவை இருக்கலாம். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லவும்.

• சரியான அளவிலான கண்ணாடிகளை தேர்வு செய்யவும். பெரிய அளவிலான கண்ணாடியினால் குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படலாம். சிறிய அளவிலான கண்ணாடிகள், கண்களை முழுவதுமாக மறைப்பதில்லை அதனால் பார்வை இடையூறு ஏற்படலாம். தவறான அளவிலான ஃபிரேம்கள் மூக்கின் கீழ் சரிந்து வரும், அதனால் கண்வலி ஏற்படலாம்.

•  கண்ணாடிகளில் மூக்குப் பட்டையைத் (nose pads) தவிர்க்கவும். அவை, குழந்தைகளின் மூக்கின் மீது தழும்புகளை உண்டாக்கலாம்.
• முழுவதும் கம்பிகள் இல்லாத மிக மெல்லிய ஃபிரேம்களைத் தவிர்ப்பது நல்லது. அவை எளிதில் உடைந்து விடும்.மெல்லிய ஃபிரேம்கள், பெரியவர்களுக்காகத்தான் பொதுவாக வடிவமைக்கப்படுகின்றன.

• நீங்கள் தேர்வு செய்ததை கண்ணாடிக் கடைகளில் பணியாற்றுபவர்களிடம் கண்ணாடி சரியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான கண்ணாடிகளைப் பரிந்துரை செய்வார்கள்கண்ணாடியைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:• கண்ணாடியை அணிவதற்கும் அகற்றுவதற்கும் இரண்டு கைகளையும் பயன்படுத்தும்படி குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும். ஒருகையை மட்டும் பயன்படுத்தும்போது கவனக்குறைவால் கண்ணாடி கீழே விழுந்து கீறல்கள் தோன்றக்கூடும் அல்லது கண்ணாடி கால்கள் வளையக்கூடும். 

• வெளியில் செல்லும்போதோ விளையாடும் நேரத்திலோ கண்ணாடியை சுற்றி சிறிய கயிறு அல்லது பெல்ட்டை அணிந்தால் நல்லது. இவைக் கண்ணாடிக் கடையிலேயே கிடைக்கும்.

• சிறிது நேரம் பகலில் தூங்கினாலும் இரவில் தூங்கினாலும் கண்ணாடியைக் கழற்றி வைப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

• கண்ணாடி அணியாத நேரத்தில் அதற்குரிய பெட்டியில் வைக்க குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். சிறிய அளவிலான ஒழுங்கு முறைகள், குழந்தைகளைப் பண்படுத்தும்.

• மூக்குப் பட்டைகள் உள்ள கண்ணாடிகளை உங்கள் குழந்தைகள் விரும்பினால் மூக்குப் பட்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவதன் மூலம் தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

• நம் குழந்தைகளுக்கு சரியான கண்ணாடிகளைத் தேர்வு செய்வோம். இந்த அழகிய உலகை அவர்கள் தெளிவாகப் பார்க்க உதவுவோம்.


 

கண் நோய்களுக்கான பூச்சுடன் கூடிய கண்ணாடி.வகைகள்:-


    

⚫   எதிர்ப்பு பிரதிபலிப்பு பூச்சுகள் (AR).

⚫   கீறல் – எதிர்ப்பு பூச்சுகள் .

⚫   புற ஊதாப் பூச்சுகள் .

⚫   ஃ போட்டோக்ரோமிக் தன்மை .

⚫   முடுபனி எதிர்ப்பு பூச்சுகள் .

⚫   நிறமிடப்பட்ட லென்ஸ்கள் .

⚫   கண்ணாடி பூச்சுகள் .1. ஒளி சிதறல் தடுப்பு கவரிங்(Anti Reflective): 

இந்த லென்ஸில் கொடுக்கப்படும் கோட்டிங் அல்லது பூச்சு கம்ப்யூட்டர் திரையிலிருந்து வரக்கூடிய அதிகப்படியான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து, கண்களைப் பாதுகாக்கும். வாகனங்கள் ஓட்டும் போது, எதிரில் வரும் வெளிச்சத்தினால் கண்கள் கூசாமல் பாதுகாக்கும்.


2. ஃபோட்டோக்ரோமிக்–ஒளிக்கேற்ப கலர் மாறும்:
வெளிச்சத்தில் கருமை நிறமுடனும் அறைக்கும் வெள்ளையாகவும் இருக்கும். வெளிச்சத்தைப் பொறுத்து ஒளி பரவலை மாற்றும் திறன் காரணமாக புற ஊதா கதிர் வீச்சின் ஆக்கிரமிப்பு விளைவுகளிலிருந்து கண்ணைப் பாதுகாக்க உதவுகிறது. 


3. போலரைசபிள் கண்ணாடிகள்:

 


பனிச் சறுக்கு செல்பவர்கள், அதிக தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. கானல் நீர் போன்ற விளைவினால் ஏற்படக் கூடிய விபத்துகளை, இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தித் தடுக்கலாம்.

4. பாலிகார்பனேட்(மெல்லிய லென்ஸ்). 

  

 

நீங்கள் விளையாட்டு விளையாடுகிறீர்கள் என்றால், உங்கள் கண்கண்ணாடிகள் எளிதாக சேதமடையும் இந்த பாதிப்பை  எதிர்க்கும் லென்ஸ்கள் நல்ல தேர்வாக இருக்கும். அவர்கள்  UV  பாதுகாப்பையும் கொண்டிருக்கும். இதை எளிதில் உடையததால் இவைகளை புல்லட் புரூப் கண்ணாடிகள் என அழைப்பதுண்டு. குழந்தைகள் கண்ணாடிகளும் எளிதில் சேதமடையும்.  


•  மெல்லியது, வளைவுகள் இல்லாதது 

•  கீறல் விழாது.

•  கதிர் வீச்சு பாதுகாப்பு 

•  மிகத் தெளிவானது 

•  மிகத் பாதுகாப்பானது 

•  கனமற்றது 

•  உறுதியானது


5. ஹைட்ரோபோபிக் பூச்சு: 

நீர் ஆளுக்கு மற்றும் தூசி சேராமல் தடுக்கிறது மற்றும் உங்கள் கண்ணாடிகளை கவனித்துக் கொள்வதை எளிதாக்குகிறது.


6. மிரர்பூச்சு: 

கண்ணாடி போன்ற பிரதிபலிப்பு ஏற்படுத்தும்.- வழக்கமான லென்ஸுடன் ஒப்பிடும் போது மேலும் இருட்டாகிறது, மேலும் வெப்பகதிர்களை நீக்குகிறது. அத்தகைய லென்ஸ்கள் குறிப்பாக நீச்சல் மற்றும் பனிச்சறுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.


7. புற ஊதா பாதுகாப்பு:  

கண்ணாடி போன்ற பிரதிபலிப்பு ஏற்படுத்தும். வழக்கமான லென்ஸுடன் ஒப்பிடும் பொது மேலும் இருட்டாகிறது. மேலும் வெப்ப கதிர்களை நீக்குகிறது. அத்தகைய லென்ஸ்கள் குறிப்பாக நீச்சல் மற்றும் பனிச்சறுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.


8. ப்ளூலைட் தடுக்கும்:


50% நீல ஒளியை வடிகட்டுகிறது

100% புற ஊதா கதிர்களைத் தடுக்கிறது•  தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி குறைய வாய்ப்பு உண்டு.

•  கணினி உபயோகித்திற்கு உகந்தது 


காண்டாக்ட் லென்ஸ் :

காண்டாக்ட் லென்ஸ்கள் வகைகள்:-

  

1) தினசரி டிஸ்போசபிள் லென்ஸ்கள்:-  இந்த காண்டாக்ட் லென்ஸ்கள் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் காலையில் ஒரு புதிய லென்ஸைத்  திறந்து இரவு ஓய்வெடுக்கும் முன் அவற்றை அப்புறப்படுத்துங்கள். இந்த தினசரி லென்ஸ்களின் வடிவமைப்பு பொதுவாக 

மிகவும் மெல்லியதாக இருக்கும்.மேலும் அவை அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.


2) மாதாந்திர டிஸ்போசபிள் காண்டாக்ட் லென்ஸ்கள்:


   இந்த காண்டாக்ட்களை ஒரு மாதம் வரை தினமும் அணியலாம் தினசரி டிஸ்போசபிள் லென்ஸ்கள் போலல்லாமல், மாதாந்திர லென்ஸ்  மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு நீங்கள் அவற்றை புதிய காண்டாக்ட் லென்ஸ் கரைசலில் சேமித்து வைக்கலாம். மாதாந்திர காண்டாக்ட் லென்கள் நீண்டகாலம் நீடிக்கும். அதிக நீடித்தது இருப்பினும் கண்களில் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்படாதவாறு அவற்றைத் தொடர்ந்து கழுவி, சுத்தம் செய்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.


3) வருடாந்திர டிஸ்போசபிள் லென்ஸ்கள்:-

இந்த காண்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


அணியும் நேரம் அகற்றும் நேரம்:-

காண்டாக்ட் லென்ஸ்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அணியலாம்.


லேசிக்:


   

லேசிக் செய்து கொள்ள இந்த தகுதி அம்சங்கள் தேவை:-


⚫ உங்கள் வயது 20-க்கு மேல் இருக்க வேண்டும்.

⚫ கடந்த ஓராண்டில் உங்கள் கண்ணாடியின் பவரில் குறிப்பிடத்தக்க

     மாற்றம் ஏற்பட்டிருக்கக்  கூடாது.

⚫ விழித்திரை நோயினாலோ, கண்நீர் அழுத்த நோயினாலோ அல்லது கண்புரையாலே 

      பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.


சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை வராமல் தவிர்க்கவும் வந்தால் பார்வை குறையாமலும்  தடுக்க வழிகள்:1) சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.   

(i) இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் 6 அடி தூரம் வேண்டும்.

(ii) அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.


(iii) தொலைக்காட்சி  முன்பாக உங்களின் குழந்தை அமரும் நேரத்தை முடிந்தளவு குறைக்க வேண்டும். 


(iv) கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்கும்படி இருப்பது.


(v) ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேலாக தொலைக்காட்சிப் பார்க்க அனுமதிப்பது நல்லதல்ல மற்றும் அதையும் தொடர்ச்சியாக செய்ய அனுமதிப்பதும் நல்லதல்ல.


(vi) அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

 

(vii) மொபைல், கம்ப்யூட்டர் ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.2) பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று வயது அடையும்போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து  கண்காணிக்க

 வேண்டும். இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். 


* நாம் ஏற்கனவே விவரித்தபடி பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம். பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும்.  

3) உங்கள் குழந்தை படிக்க அமரும் இடம் நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும் . கண் கூசும் அளவிற்கு வெளிச்சம் இருக்கக்கூடாது.

4) வெளிச்சம் கண்களில் நேராக படாமல் இருக்கிறதா என்று பார்த்து அமர வைக்க வேண்டும். 


5) வெயிலில் வெளியே செல்லும்போது, UV கதிர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சன் கிளாஸை உங்கள் குழந்தை அணியச் செய்து அழைத்துச்செல்ல வேண்டும்.இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது.  

6) 7 - 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரைஆழ்ந்த தூக்கம் அவசியம்.  அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.


 

7) இரண்டு முதல் இரண்டரை லிட்டர் (பத்து டம்ப்ளர்) தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். 


8) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை  வைத்துக் கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது.கண்களுக்கான பயிற்சிகள் :


   

கண்ணுக்கான பயிற்சிகள், கண்ணின் தசைகளை வலுப்படுத்துகின்றன. உங்கள் குழந்தை மிகவும் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கையில், அவ்வப்போது கண்களை நன்றாக சிமிட்டுமாறு சொல்ல வேண்டும். இதன்மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது. 


கண் பயிற்சிகளை பற்றி  கூடுதல் விவரங்களை அறிய: கண்களுக்கான பயிற்சிகள்


சூரிய ஒளி:
சூரிய ஒளி உடலில் படும் போது நமது உடலானது வைட்டமின் டியை தானாக உற்பத்தி செய்கிறது. காலை நேரத்தில் சிறிது  நேரம் வெயிலில் நிற்பது குழந்தைகளுக்கு போதுமானது. அதே சமயத்தில் நீண்ட நேரம் குழந்தைகள் வெயிலில் இருப்பது அவர்களுடைய சருமத்தை பாதிக்கும். ஏறக்குறைய எந்த உட்புற அமைப்பிலும் உள்ள வெளிச்சத்தை விட சூரியனின் புலப்படும் ஒளி கணிசமாக பிரகாசமாக உள்ளது, இது கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

விளையாட்டில் ஈடுபடுத்தவும்:


 

வாசிப்பு மற்றும் திரையில் பார்ப்பது போன்ற நீண்ட நேரம் செலவழிக்கும் போது கிட்டப்பார்வை தொடங்குவதற்கு காரணமாகின்றன.  தங்கள் முழு நேரத்தையும் வீட்டுக்குளேயே செலவிடும் குழந்தைகளைக் காட்டிலும் வெளியே சூரிய ஒளியில் குறைந்தது 2-3 மணி நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு குறைவான வேகத்தில் அதிகரிக்கறது. இது ஒரு எளிய பயிற்சியாகும். வெளியில் நேரத்தைச் செலவிடுவது, மரங்கள், கூடைப்பந்து, வளையங்கள்,காற்றில் பறக்கும் பந்து போன்ற தொலைதூரப் பொருட்களில் கவனம் செலுத்த உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.


சிரிப்பு: 

 வாய் விட்டு சிரிப்பதால் சந்தோஷத்திற்குரிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அதனால் உடம்பில் உள்ள தசைகள் அனைத்தும் அமைதி பெரும். இது கண்களின் தசைகளையும் சேர்த்ததே. அதனால் குழந்தை எந்நேரமும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.


கண் பார்வை திறன் அதிகரிக்கும் 8 உணவுகள்

   

1. குழந்தைகள் அதிகமாக பதப்படுத்தப்பட்ட ஜங்க் உணவை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண செய்யவும். பச்சை காய்கறிகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.

2. மீன்களில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பார்வையில் கோளாறு ஏற்படாமல், கண்கள் நன்கு பளிச்சென்று தெரியும்.


3. சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது வயதான காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.

4. கீரைகள் என்றாலே கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த உணவு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையும்,பொன்னாங்கண்ணிக்கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன.

5.கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன. எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது. கேரட்டை பொரியலாகவோ, ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதேனும் முறையிலோ  சாப்பிடலாம்.

6. வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது உங்கள் கண் பார்வையை தெளிவுபெற செய்ய மிகவும் உதவுகிறது. 

7. வால்நட் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட கொட்டை வகைகளிலும் உங்கள் கண் பார்வையை அதிகரிப்பதற்கான சத்துக்கள் ஏராளம் உள்ளன. எனவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பருப்பு வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

8.கொத்தமல்லி இலைகள்.

குறைபாடு உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்

மருத்துவரிடம் அழைத்துச் செல்வதை ஏதேனும் காரணம் சொல்லி தள்ளிப்போடக்கூடாது. தள்ளிபோடுவதன் மூலமாக, உங்கள் குழந்தையின் சிக்கல் அதிகரிக்கத்தான் செய்யும். பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கண்ணாடி அணிவதை விரும்புதில்லை.

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல  தொடங்கியவுடன் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயம் கண் மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை கண் தொடர்பான எந்த பிரச்சனையையும் வெளிப்படுத்துவதில்லை என்றாலும்  கூட வருடாந்திர பரிசோதனை பல எதிர்கால நன்மைகளுக்கு அடிப்படையான ஒன்றாகும். 
Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps