ஒற்றைத் தலைவலி  (பித்தத் தலைவலி)






ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்தால் ஒரு பக்க தலை மட்டும் வலிக்கும் சிலமணி நேரம் முதல் 3 நாட்கள் வரை தொடரும். சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும்.







ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்:

ஒற்றைத் தலைவலியின் முதன்மையான அறிகுறி தலைவலி. ஒற்றைத் தலைவலி என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதுமட்டுமல்லாமல், பலருக்கு ஒற்றைத் தலைவலி பல நிலைகளில் நிகழ்கின்றன. மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு அறிகுறிகள் ஏற்படலாம்.

ஒற்றை தலைவலியில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. ப்ரோட்ரோம் | Prodrome:

இவை ஒற்றை தலைவலிக்கான ஆரம்ப எச்சரிக்கைகள் ஆகும். ஒற்றைத் தலைவலி வருவதற்கு 1 அல்லது 2 நாட்களுக்கு முன்பும், சில சமயங்களில் அதற்கு முந்தைய நாளிலும் கூட கீழ்க்காணும் அறிகுறிகளை நீங்கள் உணரலாம்.

    
✅ சோர்வு
✅ மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு  
✅ குமட்டல்
 பசி 
✅ தசைகள் விறைப்பு 
✅ அதிகமாக சிறுநீர் கழிப்பு
✅ தூங்குவதில் சிரமம் 
மனச் சோர்வு.


2. ஆரா | Aura:
 இது இரண்டாவது நிலையாகும். ஆரா என்பது ஒற்றைத் தலைவலி தாக்குதலுக்கு முன் அல்லது அதோடு கூடவே ஏற்படும் உணர்ச்சிகரமான மாற்றங்களாகும். இதில் கீழ்காணும் அறிகுறிகள் அடங்கும்.

    

கண்களுக்கு வெவ்வேறு வடிவங்கள் அல்லது புள்ளிகள் போன்றவை காட்சிப்படுத்துதல். 

தெளிவாகப் பேச முடியாது.

வாசனை அல்லது சுவையில் மாற்றம்.

ஏதோ ஒரு மாதிரியான ஒலி காதுகளில் கேட்டு கொண்டே இருப்பது.

தற்காலிக பார்வை இழப்பு 

ஒற்றைத் தலைவலி 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். வலி வருவதைச் சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரெனச் சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும். சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாகக் கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகிச் சரியாகும். வாந்தி அல்லது குமட்டல் உணர்வு இருக்கும்.
 3. தலைவலி | Headache: 
ஒற்றைத் தலைவலி பொதுவாக மந்தமான வலியாகத் தொடங்கி மோசமான வலியாக உருவாகிறது. விண் விண்(Pulsating)என்ற  துடிப்புடன் கூடிய வலி. பெரும்பாலான ஒற்றைத் தலைவலி நான்கு மணி நேரம் முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். உடல் செயல்பாடுகளைச் செய்யும் போது  இதன் வலி மேலும் மோசமாகிறது. அறிகுறிகளாவன:

   
⚫ வாசனை ஒளி உணர்திறன் 
⚫ கழுத்தில் வலி 
⚫ மனச் சோர்வு 
⚫ குமுட்டல் மற்றும் வாந்தி 
⚫ தூக்கமின்மை 
4. போஸ்ட் ட்ரோம் | Post-drome:

இது மைக்ரேன்  ஹேங்கோவர்  என்று அழைக்கப்படுகிறது. இது ஒற்றைத் தலைவலியின் இறுதிக்  கட்டமாகும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் 80% பேர் கீழ்க்காணும் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.
   
⚫அதிக களைப்பு.  
⚫சோர்வு. 
⚫கவனம் செலுத்த முடியாத நிலை.
⚫ குமட்டல். 
⚫கழுத்து இறுக்கம்.
⚫பலவீனம். 

வலியின் தன்மை
 விண் விண் என்று துடிப்புடன் கூடிய வலி.(டென்ஷன் தலைவலி வந்தால் தலை முழுவதும் வலி இருக்கும். தலையை அமுக்குவது அல்லது அழுத்துவது போல தோன்றும்). 

ஒற்றைத் தலைவலி வருவதற்கு என்ன காரணம்:

பல காரணிகள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு நபருக்கும் காரணங்கள் மாறுபடலாம். சில பொதுவான காரணங்கள்; 
   
உரத்த சத்தங்கள்:
 நீங்கள் ஒலி உணர்திறனை அனுபவிக்கும் போது இலை விழும் சத்தம் கூட வெடிகுண்டு வெடிப்பது போல் ஒலிக்கும்! 



ஒளி 
வாசனை 
✅ உட்காரும் தோரணை
வானிலை
✅தலையில் காயம்.
✅ குறிப்பிட்ட உணவுகள்
✅பெண்களின் ஹார்மோன் மாற்றங்கள் 
✅வானிலை மாற்றங்கள் 
✅அதிகப்படியான மன அழுத்தம் (work environment).
உண்ணாவிரதம் இருப்பது அல்லது உணவைத் தவிர்ப்பது .
✅பயணம் 
✅மருந்துகள் 
ஒற்றைத் தலைவலிக்கான மாத்திரைகள்  :
கீழ்காணும் சிகிச்சைகள்(one side headache treatment) மூலம் ஒற்றை தலைவலியை எளிதாக்கலாம்.
    
◼விரைவான வலி நிவாரணத்திற்கு ஆஸ்பிரின், கா
ஃபின், அசெட்டமினோஃபென் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை பயன்படுத்தவும். வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் பொது கவனமாக இருங்கள், ஏனெனில் வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் தலைவலியை அதிகரிக்கலாம். நீங்கள் 19 வயதிற்குட்பட்டவராக இருந்தால் வலி மருந்துகளைத் தவிர்க்கவும், ஏனெனில்  இது ரெய்ஸ் சிண்ட்ரோம் ஆபத்தை உருவாக்கும். வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், ஏனெனில் உங்கள் நிலையைப் பொறுத்து சரியான மருந்தை பரிந்துரைப்பார்கள். 

டிரிப்டான்ஸ், இந்த மருந்துகள் உங்கள் மூளையில் உள்ள இரசாயனங்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
குமட்டல் மருந்துகள்.
எர்கோடாமைன்(க ஃபர்கோட் , மிகர்கோட், எர்கோமர்).  இது உங்கள் தலைவலிக்கும் நன்றாக வேலை செய்யும்.
சில சமயங்களில், பிற சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு ubrogepant(Ubrelvy) அல்லது rimegepant(Nurtec) பரிந்துரைக்கலாம்.

ஒற்றைத் (Migrane)தலைவலியின் வகைகள் :
I காமண் மைக்ரேன்:
இது ஆரா இல்லாமல் வரும் தலைவலி.
II கிளாசிக்கல் மைக்ரேன்:

கிளாசிக்கல் மைக்ரேன் என்னும் போது தலைவலி வரும் போது கண்ணுக்கு முன்னாடி பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கும் சில நேரங்களில் கலர் கலராக வண்ணங்கள் போன்ற பிம்பங்கள் உருவாகும்.
III நியூராலஜிக் மைக்ரேன்:

நமது வலது பக்க மூளை இடதுபக்கம் கை கால்களை கண்ட்ரோல் செய்கிறது. இடது பக்கம் மூளை வலது பக்கம் இருக்கும் கை, கால்களை கண்ட்ரோல் செய்கிறது. தீவிர மைக்ரேன் வலியாக இருக்கும் போது ஒருபக்கம் கை, கால்களின் பலம் குறைவதை உணரலாம். நியூராலஜிக் மைக்ரேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இது பெரும்பாலானவருக்கு வருவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
IV அப்டோமினல் மைக்ரேன்:

 இது வயிறு வலியாக வெளிப்படும். படிக்கும் குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.




ஒற்றைத் தலைவலியை தவிர்க்கும் முறை:

⚫ போதுமான தூக்கம்.
⚫ வெயிலில் செல்வதை தடுக்க வேண்டும். 
⚫ சூரிய ஒளிபடாமல் இருக்கும்படி சன்கிளாஸ் அணிவது, இதை தவிர்க்கும்.
⚫  உணவு -வலி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்ப்பது.
⚫சாத்தியமான ஒளி தூண்டுதல்களை அகற்றுவது.
⚫ சாத்தியமான ஒலி தூண்டுதல்களை நீக்குதல்.
⚫ கடுமையான வாசனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்
⚫ உங்கள் உட்கார்ந்த தோரணையை சரிசெய்தல்.
⚫ தாக்குதலுக்கு போதுமான தயார் நிலையில் மருந்துகள்.
⚫குளிர்ச்சியடைய எங்காவது இருப்பது.
தண்ணீர் :
    தினமும் 2 லீட்டர்  (10 டம்ளர் ) தண்ணீர் குடிக்கவும். (ஜீரக தண்ணீர் பித்த தலைவலியை குறைக்கும்).
சுற்றுப்புற பருவநிலை:
சுற்றுப்புற பருவநிலை மாற்றம் இத்தலைவலியை உருவாக்கினால் வெளி யாத்திரையை தவிர்க்கவும்.


ஒற்றைத்தலைவலிக்கான பரிசோதனை :

1. பிளவு-விளக்கு பரிசோதனை(slit-lamp):


    பிளவு விளக்கு என்பது ஒரு உயர்-தீவிர ஒளி மூலத்தைக் கொண்ட ஒரு கருவியாகும். கண்ணிமை, வெள்ளை  விழி , வெள்ளை விழியில் வெளிப்படலம், கருவிழி, இயற்கை  லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதக் கண்ணின் முன் பகுதி அல்லது முன் கட்டமைப்புகள் மற்றும் பின்புறப் பகுதியை ஆய்வு செய்ய விளக்கு உதவுகிறது. இது பல்வேறு கண் நோய்களை  கண்டறிய உதவுகிறது.
2.காற்று அழுத்த கருவி (Non Contact Tonometer):
   
இது கண் பிரஷர் கண்டு பிடிக்க உதவும்.
3. புகைப்படக் கருவி :
  
நவீன தொழில் நுட்ப கானன் (Canon) புகைப்பட கருவி நரம்புகளை துல்லியமாக படமெடுக்கிறது.
4. ஸ்கேன்:
மைக்ரேன் தலைவலி தொடர்ந்து இருப்பவர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் எடுப்பது மூளைக்குள் வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும்.20 நாட்களுக்குள் சரியாக்கவில்லை என்றால் இதை மருத்துவர் பரிந்துரைப்பார்.

 பாதிப்பின் அளவு

உலகில் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் ஒன்று, ஒற்றைத் தலைவலி (Migraine). உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. உலக மக்கள்தொகையில் மிகவும் மோசமான ஒற்றைத் தலைவலியால் 2 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இந்த நோயால் 15 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கே பாதிப்பு அதிகம்:
இந்நோய் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம் வருகிறது. குறிப்பாக 35 முதல் 45 வயது உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலகட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரத்திலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான சாத்தியம் அதிகம்.

ஒற்றைத்தலைவலி நீங்க வைத்தியம் - லாவெண்டர் எண்ணெய்:

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்கள் குளியல் நீரில் கொஞ்சம் லாவெண்டர் எண்ணெயை கலந்து சிறிது நேரம் அந்த நீரை நன்கு சுவாசிக்கவும், இந்த வாசனையை சுவாசிப்பதால் தலைவலி குணமாகிறது.
 இந்த வாசனைத் திரவியம் பிடிக்காதர்வர்கள், வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றைத்தலைவலி குணமாகிறது.

விரிவாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்ஒற்றைத் தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் .

                                 



Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps