கண்புரை பாதிப்பினால் பார்வை இழப்பு ஏற்பட்டால் அதை எளிதில் திரும்ப பெற முடியும். கண்புரை அகற்றப்பட்டு கண்ணுக்குள் உள்விழி லென்ஸ் அல்லது IOL எனப்படும் Intra Ocular Lens பொருத்தப்படும்.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் எந்த விதமான லென்ஸ் உபயோகிப்பது சிறப்பாக இருக்கும் என்ற புரிதல் வேண்டும்.
1. எந்த ஆண்டு முதல் இந்த IOL பொருத்தப்படுகிறது ? இதன் வரலாறு என்ன?
இரண்டாம் உலகப் போரில் போர் விமானங்களின் கண்ணாடிகள் பாலிமீதைல் மீதாகிரிலேட் (PMMA) மூலம் செய்யப்பட்டிருந்தன.
இவை விபத்து மூலம் சிதறி கண்ணுக்குள் சென்றாலும் அதிக எதிர்வினை (Reaction) இல்லாமல் கண் அமைதியாக இருந்தது. இதை பார்த்த சர் ஹரோல்ட் ரிட்லி (Harold Ridley) என்ற மருத்துவருக்கு உள்விழி லென்ஸ் பொருத்தும் எண்ணம் எழுந்தது. அதை அவர் 1949ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் செயல்படுத்தினார். இது புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் கனவில் ஒரு புதிய உதயம்.
2. மூலப்பொருட்கள் என்ன ?
பிஎம்எம்ஏ (PMMA) எனப்படும் பாலிமீதைல் மீதாகிரிலேட் (Polymethyl methacrylate) முதலிலும் பின்னர் சிலிகான் (silicon) அதை தொடர்ந்து அக்ரிலிக் (Acrylic) லென்ஸ்கள் உபயோகிப்பதற்கு வந்தன.
3. லென்ஸ் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ?
கண் அமைப்பு:
லென்ஸ் அமைப்பு:
மோனோபோக்கல் லென்ஸ் மல்டிபோக்கல் லென்ஸ் டிரை போக்கல் லென்ஸ்
4. எத்தனை வகையான உள்விழி லென்ஸ் இருக்கின்றன ?
மோனோபோக்கல் லென்ஸ் :
தூரப்பார்வையை சரி செய்யும். கிட்டப் பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டும்.
மல்டிபோக்கல் லென்ஸ்:
இது தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இரண்டையும் சரி செய்கிறது. இந்த லென்ஸ்அணிபவர்களுக்கு கண்ணாடி அணிய தேவையில்லை.
டிரை போக்கல் லென்ஸ்:
தூரப்பார்வை இடைப்பட்ட பார்வை மற்றும் கிட்டப்பார்வை இவை மூன்றையும் சரி செய்யும். கண்ணாடி தேவையில்லை.
டாரிக் லென்ஸ்:
கண்ணில் சிலிண்டர் பவர் உள்ளவர்களுக்கு மட்டுமே டாரிக் லென்ஸ் பொருந்தும். தூரப்பார்வை தெளிவாக தெரியும்.
மோனோவிஷன் ஈ.டி.எப் (Extended Depth of Focus) லென்ஸஸ் :
கூர்மையான அல்லது ஆழமாக பார்வை கிடைக்கும். கண்ணாடி இல்லாமல் 1.50 Diopter வரை பார்க்க முடியும். பரந்த அளவில் கவனம் செலுத்த முடியும். சிறந்த தூரம், மற்றும் இடைநிலை பார்வை ஆகியவற்றை வழங்குகிறது மற்றும் கண்ணாடி இல்லாமல் ஒரளவுக்கு வாசிக்க முடியும்.
புதிய தலைமுறை லென்ஸ் (Others):
ஒளி அனுசரிப்பு லென்ஸ்- இந்தியாவில் கிடைப்பதில்லை-லாசிக் நோயாளிக்கு பயன்படுகிறது.
இவைகளைத் தவிர லென்ஸில் கவனிக்க வேண்டியவை:
மற்ற வகை லென்ஸ்கள்:
a. மஞ்சள் பூச்சு(Yellow coating):
புற ஊதா கதிர் என அழைக்கப்படும் மின்காந்த அலைகளை தடுக்க இப்பூச்சு உதவும். இதனால் விழித்திரை சேதத்திலிருந்து பாதுகாக்கப்படலாம். விழிப்புள்ளி சிதைவு (macular Degeneration) ஏற்படுவதை இது ஓரளவுக்கு தடுக்கலாம். வேறுபாடு உணர்திறனை (Contrast sensitivity) இந்த லென்ஸ்கள் மேன்படுத்துகின்றன.
b. ஆஸ்பெரிக் லென்ஸ்:
பொதுவாக லென்ஸ் ஒரு கோளத்தின் பகுதியாக கருதப்படுகிறது. கோளலென்ஸுடன் ஒப்பிடும்போது ஆஸ்பெரிக் லென்ஸ் சற்று மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. ஒளி சிதைவுகள் மிகக் குறைவு.
c.ஹைட்ரொபோபிக்(hydrophobic):
பொருளின் மேம்பட்ட ஒட்டும் தன்மை குறைவு. இதனால் எளிதில் அழுக்கு படிவதில்லை. இதனால் குறைந்த நீர் உள்ளடக்கம் மின் காந்த ஒளி அலைகளை வேறுபாடு உணர்திறன் (Control sensitivity) புற ஊதாக்கதிர் (Ultraviolet rays).
d. ஹைட்ரோஃபிலிக்(hydrophilic):
ஹைட்ரோஃபிலிக் லென்ஸ் அக்வஸ் திரவத்தை ஈர்க்கிறது, அதாவது அக்வஸ் திரவத்தில் இடைநிறுத்தப்பட்ட கொலாய்டுகள் இந்த லென்ஸ்கள் மீது வேகமாக படிகின்றன. ஹைட்ரோஃபிலிக் உள்விழி லென்ஸ்கள் பிசிஓ அல்லது பின்புற காப்ஸ்யூல் ஒளிபுகாதலுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன, அதாவது லென்ஸில் ஒரு ஒளிபுகா அடுக்கு உருவாகிறது.
e. மடிக்கக்கூடியது:
ஒரு மடிக்கக்கூடிய உள்விழி லென்ஸ் அதன் அளவு பாதியாக மடிக்கப்படுகிறது. இது ஒரு சிறிய துளை மூலம் உள்விழி லென்ஸ் கண்ணுக்குள் வைப்பதை சாத்தியமாக்குகிறது. துளை 1.8 மிமீ வரை சிறியதாக இருக்கலாம். ஒரு மடிக்கக்கூடிய உள்விழி லென்ஸ் (IOL) வைக்கப்பட்டவுடன், அது அதன் முழு வழக்கமான அளவிற்கு விரிவடைகிறது.
f. சதுர விளிம்பு லென்ஸ்:
கண் உள் விழி லென்ஸ் வணிக ரீதியில் சந்தைப்படுத்தப்பட்ட சதுர முனைகள் கொண்ட உள்விழி லென்ஸ்கள் பின்பக்க பார்வை விளிம்பின் கூர்மையில் வேறுபடுகின்றன. அழுக்கு படிவதை தடுக்க இவை உதவலாம்.
g. பைகான்வெக்ஸ்:
லென்ஸின் சக்தியானது முன்புறம் (முன்) மற்றும் பின்புறம் (பின்புறம்) பரப்புகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டிருக்கும் வடிவமைப்பில் பெரும்பாலான உள்விழி லென்ஸ்கள் பைகான்வெக்ஸாக இருக்கும்.
h. மூன்று துண்டுகள் உள்விழி லென்ஸ்கள் (IOL):
ஒற்றை-துண்டு லென்ஸ் மென்மையான மற்றும் பரந்த தொடுவியல் பகுதி உள்ளன, அவை ஒளியியல், பொதுவாக ஹைட்ரோபோபிக் அவை அக்ரிலிக் மூலப் பொருட்களால் ஆனவை, அதேசமயம் 3-துண்டு உள்விழி லென்ஸ்கள் பாலி மெத்தில் மெதக்ரிலேட்டால் (PMMA) செய்யப்பட்ட திடமான தொடுவியல் பகுதி கொண்டுள்ளன.
i. ஹைபர்விஷன்:
நாம் அடையக்கூடிய சிறந்த பார்வை 6/6 அல்லது N6 ஆகும். லேசர் (Laser) அறுவைசிகிச்சை உள்விழி லென்ஸ்கள் (IOL) உங்களுக்கு பார்வை குறைவாக இருந்தாலும் 6/6 பார்வையைப் பெற உதவும், ஆனால் கழுகின் பார்வைக் கூர்மையை அடைவது சாத்தியமற்றது. கழுகுக் கண்களை அடைவது எங்களுக்கு ஒரு கற்பனையாக இருக்கும் அதே வேளையில், லேசர் (laser) அறுவை சிகிச்சை உள்விழி லென்ஸ்கள்( IOL) மூலம் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தலாம்.
5. என்ன செலவாகும் :
மோனோபோக்கல் லென்ஸ் : 5000 முதல் 50,000 வரை
மல்டிபோக்கல் லென்ஸ் : 35,000 முதல் 70,000 வரை
டாரிக் லென்ஸ் : 35,000 முதல் 90,000 வரை
இன்சூரன்ஸ் கவர் உள்ளது.
6. யாருக்கு எந்த லென்ஸ் பொருந்தும் என எப்படி கண்டுபிடிப்பது?
லென்ஸ் வைத்த பின்பு எப்படியான பார்வையை எதிர்பார்க்கீற்கள் என்ற புரிதல் வேண்டும்.
உங்கள் வாழ்க்கை முறை வடிவமைப்பு என்ன?
a) சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், கார்ஓட்டுதல் பயணம் மற்றும் வெளிப்புற வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் மோனோபோக்கல் லென்ஸ் தேர்வு செய்கிறார்கள்.
விலையுர்ந்த IOL கலவையை தேர்ந்தெடுப்பவர்கள் மோனோவிஷன்ஈ.டி.எப் (Extended Depth of Focus) கூரிய பார்வை உடைய லென்ஸ் உபயோகிக்கலாம். இது தூரப்பார்வை நடுநிலை பார்வை மட்டுமல்ல ஓரளவுக்கு வாசிக்கவும் முடியும்.
b) கூட்டு நோய்கள்:
1) விழிப்புள்ளி சிதைவு (ARMD)
2) விழித்திரை விலகல் வரலாறு
3) சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரைநோய் (Diabetic Retinopathy)
4) இயற்கை லென்ஸ் காயங்கள்
இந்த பிரச்சனைகள் இருந்தால் மோனேபோக்கல் சிறந்தது.
c) நான் வீட்டை விட்டு பெரிதும் வெளியில் செல்வதில்லை வீட்டில் அமர்ந்து வேலை. தையல் அல்லது வேலையிடத்தில் கிட்டப்பார்வை தேவை. (நகை வேலை) என்று கூறுபவர்களுக்கு மல்டிபோக்கல் நல்லது.
இதில் குறைந்த செலவில் மோனோபோக்கல் தூரப்பார்வை ஒரு கண்ணிலும் கிட்டப்பார்வை ஒரு கண்ணிலும் கொடுக்க இயலும் .
அல்காண் மல்டிபோக்கல் லென்ஸ் அல்காண் ட்ரைபோக்கல் லென்ஸ்
d) மல்டிபோக்கல் லென்ஸ் எல்லா நபர்களுக்கு பொருந்துவதில்லை. இரவில் வாகனம் ஒட்டுபவர்களுக்கு வெயிலில் வெளியோ செல்ல வேண்டிய வேலை பார்ப்பவர்களுக்கு கண்கூச்சம்(Glare) ஏற்படலாம்.
மேலும் விவரங்களுக்கு மருத்துவர் அல்லது ஆலோசகரை மருத்துவமனையில் தொடர்பு கொள்ளவும் |
{{r.reply}}
Your comment was submitted for review. It will start display once it was approved by Admin
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps
Comments