கண் கட்டி என்பது  இமைகளை பாதிக்கும் ஒரு நோய் ஆகும். இது ஹார்டியோலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண் இமைகளின் வெளிப்புற அல்லது உட்புற மேற்பரப்பில் காணப்படுகிறது. கண்ணிமையில் ஒரு சிறிய பரு அல்லது தடிப்பு போல் கண்கட்டி தோன்றும் . உடல் உஷ்ணம், சுற்றுப்புற வெப்பம், அதிகமாகும் போது கண் கட்டி ஏற்பட முக்கிய காரணம் . 


அறிகுறிகள்:-  

➰பொதுவாக கண்ணிமைக் கட்டி பார்ப்பதற்கு ஒரு சிறிய பரு போல கண்ணுக்கு அருகில் தோன்றும்.
 இது சிறியதாக சிவப்பு நிறத்தில் இருக்கும்.
கண்கட்டி தோன்றினால் கண் பகுதியில் வலியை ஏற்படுத்தும் .
கண் இமைகளில் வீக்கம் ஏற்படலாம் மற்றும்  இந்த வீக்கத்தில் இருந்து சில திரவம் வெளியேறலாம்.
கண் இயக்கங்களில் அசௌகரியமான நிலை கண்களில் இருந்து அடிக்கடி நீர் வடிதல்.


காரணங்கள்:-


➰பாக்டீரியா தொற்று ஏற்படுத்துவதன் காரணமாக கண்கட்டி ஏற்படும்.
➰ஆபத்துகாரணிகளில் நோய் எதிர்ப்புத்திறன் அற்ற நிலை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.
➰சில சமயங்களில் அதிகமான உலர்கண்கள் தொற்று நோயை தூண்டலாம்.
➰உடல் உஷ்ணம் அதிகமாகும் போது இது வரலாம்.


வலியில்லா கண்கட்டி:-
சிலருக்கு கண்கட்டி இமை ஓரத்தில் வராமல்  சற்று பின்புறத்தில் வரலாம். கொழுப்பு நீர் சுரப்பிகள் அடைபடுவதால் இது உண்டாகிறது.


அறிகுறிகள்:-
• வீக்கம் ஏற்படும்
• வலி இருக்காது
• நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

காரணம்:

கண்கட்டி எந்த காரணத்தினால் ஏற்படுகிறதோ அதே காரணத்தினால் வலியில்லா  கண்கட்டி வரலாம்.

சிகிச்சை:-

1. நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(Antibiotic):


  


➰ நோயை குணப்படுத்துவதற்கும் பாக்டீரியாவை  அகற்றுவதற்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்  கொடுக்கப்படுகின்றன.
➰சொட்டு மருந்து மற்றும் களிம்பு மாத்திரைகள் 5 நாட்கள் உபயோகிக்கவும்.
வலியை மாற்ற வலி மாத்திரைகளும் வீக்கத்தை குறைக்க அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
➰ உடல் உஷ்ணம் மாற வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் சத்து மாத்திரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும். 


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் பயன்கள்: 

ஊட்டச்சத்து குறைபாடு இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை உணவுகள் மூலம் கூட சுலபமாக சரி செய்து விடலாம். இருப்பினும் ஒரு சிலர் விட்டமின் குறைபாடுகளுக்காக மாத்திரை எடுத்து கொள்வது வழக்கம்.


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை : எட்டு விட்டமின்களில் தொகுப்பே வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் எனப்படும். வைட்டமின் பி 1 தயமின், வைட்டமின் பி 2 ரைபோஃபிளேவின், வைட்டமின் பி 3 நியாசின்,வைட்டமின் பி 5,  வைட்டமின்  பி 6 பைரிடாக்ஸின், வைட்டமின் பி 7 பயோட்டின், வைட்டமின் பி 9 ஃ போலேட் , வைட்டமின் பி 12 கோபாலமின் போன்ற எட்டு வைட்டமின்களின்  தொகுப்பே வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்  எனப்படும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை யார் சாப்பிடலாம் ?

           

➰குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.

➰சிறுநீரக நோய், கல்லீரல், இதய நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் எந்த விதமான உபாதைகளும் ஏற்படுவதில்லை இருப்பினும் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் உபயோகப்படுத்துவது நல்லது.

➰மது அருந்தி விட்டு விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை எடுத்து கொள்ள கூடாது. 

➰இந்த மாத்திரையை  நீங்கள் நீங்கள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடுவது நல்லது.

2. அறுவை சிகிச்சை :  சொட்டு மருந்தில் பயன்  இல்லையென்றால் சிறிய கீறல் மூலம் பழுப்பை அகற்றலாம்.  வலி மற்றும் உணர்ச்சி இல்லாமல் இருக்க மருந்து ஊசி மூலம் கட்டிக்கு அருகாமையில் செலுத்தப்படும். சில நிமிடங்களில் வலி இல்லாமல் கட்டி அகற்றப்படும்.இது ஒரு இலகுவான சிகிச்சை 10 நிமிடத்தில் செய்யலாம். ஆஸ்பத்திரியில் தங்க தேவையில்லை ஒரு நாள் வீட்டில் ஓய்வு தேவைப்படலாம்.

3. இயற்கை மருத்துவம் a) கண் கட்டிக்கு செய்யும் சில  நாட்டு  மருந்துகள்:

 1.ஒத்தடம் 

 


◾ ஒரு தேநீர் பை
◾வெதுவெதுப்பான தண்ணீர்

◾ டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் ஒரு நிமிடம் நனைக்கவும்.
◾ கூடுதல் தண்ணீரை அகற்றி, இந்த தேநீர் பையை பாதிக்கப்பட்ட கண்ணின் மீது பை குளிர்ந்து போகும் வரை வைக்கவும்.


2. கல் உப்பு 

    கல் உப்பு 2 டீஸ்பூன் அளவு எடுத்து இரும்பு வாணலியில் சேர்த்து சூடு பறக்க வறுத்து சற்று கனமான துணியில் போட்டு மூட்டையாக கட்டி கொள்ளவும். இதை கண்களுக்கு ஒத்தடம் கொடுத்துவந்தால் கண் கட்டி வீரியம் குறையும்.

 

உப்பு ஆறியதும், இருப்புச் சட்டி மீண்டும் சூடாக்கி, மீண்டும் சூடு வரும் வரை மூட்டையை அதன் மேல் வைக்கவும். உப்பு சூடாவதற்கு சில நிமிடங்கள் போதும். மீண்டும் பயன்படுத்தவும்

3. சாதம் 

         மண் பானையில் சாதத்தை வடித்த கையோடு உடனடியாக எடுத்து மெல்லிய துணியில் போட்டு கட்டி வந்த இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுத்தால் வலி உபாதை நிச்சயம் குறையும். தினமும் சாதம் வடித்த உடன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் நான்கைந்து நாளில் பலன் நிச்சயம் கிடைக்கும்.
4. சூடான தண்ணீர் :


     சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும். தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். துணியை பிழியவும் அல்லது முறுக்கவும், அதனால் அது ஈரமாக இருக்கும், ஆனால் தண்ணீர் கீழே விழக்  கூடாது. பின்னர் மெதுவாக உங்கள் கண்ணின் மேல் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும்.  கண் கட்டியை அழுத்தவோ அல்லது துடைக்கவோ முயற்சிக்காதீர்கள்.

5. கொய்யா இலை :     கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்.
b) உடல் வெப்பநிலையை குறைக்க சில எளிய தீர்வுகள் உள்ளன. 

உடல் சூட்டை உடனடியாக குறைக்க சில குறிப்புகள்:

1. தேங்காய் தண்ணீர்:

    

 கோடையில் தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் குடிக்கவும். தேங்காய் நீரில் உள்ள எலெக்ட்ரோலைட்டுகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் சேர்ந்து உங்கள் உடல் ஒரு நொடியில் ரீஹைட்ரேட் செய்யும். கோடையில் உங்கள் உடலை புத்துயிர் பெறவும், நீங்கள்  புத்துணர்ச்சி பெறவும் இது சரியான வழியாகும்.


2. மோர்:

தயிர் என்பது ஒரு மாயாஜால உணவாகும், இது நோயுற்ற உடலை வெப்பத்திலிருந்து காப்பாற்றும். இது வயிற்றை குளிர்விக்க உதவுகிறது மற்றும் செரிமான கோளாறுகளிலிருந்து உங்களை விடுவிக்கிறது. தயிர் உங்களை ஹைட்ரேட் செய்ய ஒரு புரோபயாடிக் மற்றும் எலக்ட்ரோலைட்டாகவும் செயல்படுகிறது. உண்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது, வெப்பமான கோடை மாதங்களில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க சரியான வழியாகும்.

3. தர்பூசணி:தர்பூசணியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் 91.45 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. தர்பூசணிகள் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இது மிகவும் பிரபலமான பருவகால பழங்களில் ஒன்றாகும், குறிப்பாக துணை வெப்பமண்டல பகுதிகளில், இந்த பழத்தை கடைகளில் காணலாம்.4. எலுமிச்சை ஜூஸ்:செய்ய எளிமையானது மற்றும் கோடையில் மிகவும் புத்துணர்ச்சி தரும். இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.5. வெந்தயம் :
வெந்தயம் உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும். நீங்கள் சில வெந்தய விதைகளை சாப்பிடலாம் அல்லது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை குடிக்கலாம்.


6. மாதுளை:
இயற்கையாகவே உடல் சூட்டைக் குறைக்கவும், குளிர்ச்சியாகவும் இருக்கவும் தினமும் ஒரு கிளாஸ் மாதுளை சாறு அருந்தலாம். எனவே கோடையில் மாதுளை சாப்பிடுவது மிகவும்  நல்லது.7. வெள்ளரிக்காய்:வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் உடலை மலச்சிக்கல் மற்றும் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. வெள்ளரிகளில் அதிக அளவு தண்ணீர் உள்ளது, இது கோடை காலத்தில் மிகவும் அவசியம்.8. பச்சை இலை காய்கறிகள்:
 பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும், ஏனெனில் அவற்றில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இருப்பினும், அவை அதிகமாக சமைத்தால் தண்ணீரை இழக்கக்கூடும்.
9. வாழைப்பழங்கள்:

 

உடலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். இது திசு சுருங்குவதற்கு வழிவகுக்கிறது, அதிக நீர் உறிஞ்சுதலை அனுமதிக்கிறது,  உங்களை குளிர்விக்கிறது. மேலும் இந்த பழம் உடலில் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
10. நுங்கு:

   

   பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு பனைநுங்கு, நுங்கில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடை காலங்களில் அதிகம் விற்கப்படும் நுங்கினை அதிகளவு வாங்கி சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். மேலும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps