மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாகும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இப்படியான பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் சிகப்பு நிறமுடனும் ஈரப்பதத்துடன் வைக்கிறது.


இது ஆபத்தான ஒன்று இல்லையென்றாலும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தொந்தரவு தரக்கூடியது. முதலில் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இது அடுத்த கண்ணிற்கும் பரவும்.


கிருமி காரணிகள்:




     அடினோ வைரஸ் எனப்படும் ஒரு கிருமியினால் உருவாகும் இந்த நோய் சென்னை கண் நோய், இளம் சிவப்பு கண், கண் வலி, மெட்ராஸ் ஐ  என பல பெயர்களில் அறியப்படும். சென்னை கண் நோய் என்ற சொல் பொதுவாக வைரஸ், பாக்டீரியா, கிளாமிடியவினால் உண்டாகும் கண் நோய்களையும் சேர்ந்த பொதுவான பெயர்.


மெட்ராஸ் ஐ (madras eye) என்று சொல்ப்படுகிற விழி வெண்பட அழற்சி (Conjunctivitis) உண்டாவதற்கு இரண்டு வகையான காரணங்கள் இருக்கின்றன. அவை,


1.  வைரஸ் தொற்று

2. பாக்டீரியா தொற்று


வைரஸ் கிருமி:


பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது இந்த வைரஸ் தொற்றால் பரவும் இமைப்படல அழற்சியால் தான். இந்த வகை தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக் கூடியதாக இருக்கும். கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது மிக எளிதாக பரவும்.


அடினோ வைரஸ் வகை 8 மற்றும் 19 கிருமி உடம்பில் வந்த பின் 4 முதல் 7 நாட்கள் கழிந்து நோய் ஆரம்பமாகும். வைரஸ் பரவுதல் இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.


பாக்டீரியா கிருமி:


ஸ்டாபிலொகோக்கல் அல்லது ஸ்ட்ரெப்டொகோக்கல் பாக்டீரியாவினால் வருவது பாக்டீரியா தொற்றாகும்.


பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு உடனடியாக ஒருவரிலிருந்து மற்றவர்களுக்கு பல்வேறு தொடர்புகள் மூலமாகப் பெரும்பாலும் தூய்மையின்மையின் காரணமாக பரவுகிறது.


எதினால் மெட்ராஸ் ஐ என்று பெயர்:


    சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் முதன் முதலாக இந்த நோய் கண்டறியப்பட்டதால் இந்த நோய் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது. மெட்ராஸ் ஐ  ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டதாகும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் பொது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐயின் அறிகுறிகள் ஆகும்.


இந்த நோயை உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர். கிரிக் பேட்ரிக் என்பவர். இவர் உலகில் இரண்டாவது மிகப் பழமையான எழும்பூர் கண் மருத்துவமனையில் பணியாற்றும் போது இதைக் கண்டு பிடித்ததால் இது சென்னை கண் நோய் என அழைக்கப்படும்.




வெப்பம் அதிகமான நேரங்களில் இந்த வைரஸ் கிருமி அதிகமாக பரவும். குளிர்ந்த மலைப்பிரதேசங்களில் இந்த நோயை காண்பது அரிது. 10 வருடங்கள் நான் கண் மருத்துவராக மூணார் பகுதியில் வேலை செய்த போது  ஒரு சென்னை கண் நோய் நோயாளியையும் பார்த்ததில்லை .




மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள்:


* கண்களில் அதிக நீர்ச்சுரப்பு 


* கண் சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கம்

* தொடர்ந்த கண் வலி 

* இமைகளில் காணப்படும் பிசுபிசுப்பு 




* வெளிச்சத்தில் கண் கூசுதல் 

* வெண்மையான பழுப்பு காணப்படுதல் (வைரஸ் )

* கண்களில் பச்சை அல்லது மஞ்சள் நிற பழுப்பு (பாக்டீரியா தொற்று).

• கண் உறுத்தல் , எரிச்சல்.

• கண் பழுப்பு கட்டி காலையில் கண் மூடியிருத்தல்.



கண்ணில் தண்ணீர் வடிதல்


ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். அதுவே தீவிரமான வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கண்ணில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.


சிவப்புக் கண் பாக்டீரியா அல்லது வைரஸ் என்பதை எப்படிச் சொல்வது?


காரணம் எதுவாக இருந்தாலும், சிவப்புக் கண்ணின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். இது வேறுபடுத்துவது கஷ்டம். ஆனாலும் கண்களில் பழுப்பு வெள்ளை நிறத்தில் இருந்தால் வைரஸ் தொற்றும், மஞ்சள் நிறத்தில் இருந்தால் பாக்டீரியா தொற்றுமாக இருக்கும். 


எனக்கு கண் வலி  எப்படி வந்தது?




வைரஸ் கிருமிகள் கண் நோய்  உள்ளவர் மீதும் அவர் தோட்ட இடங்களிலும் அவர் உபயோகித்த பொருட்களிலும் படர்ந்திருக்கும். நோய் உள்ளவர்களை நாம் தொடும் போதோ  அல்லது அவர்கள் தொட்ட உபயோகித்த பொருட்களை நாம் தொடும் போதும் அந்த விரல்களால் நாம் கண்ணை தொட்டாலும் நோய் பரவல் ஏற்படுகிறது. அவர்கள் கண்களை நாம் பார்ப்பதனால்  நோய் பரவல் ஏற்படாது.


நேருக்கு  நேர்  பார்ப்பதால்  பரவுமா?




பொதுவாக தொற்று ஏற்பட்டவர்கள் தங்களது கண்களை தொடக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட சொல்வோம். இது நேருக்கு நேர் பார்ப்பதால் பரவாது. ஆனால், சுத்தமாக இருக்க வேண்டும். 


எனவே, தான் தொற்று ஏற்பட்டுவரும், அவரை சுற்றி உள்ளவர்களும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வேறு யாரவது உங்களுக்கு மருந்து போடுகிறார்கள் என்றால் நீங்களும் கை கழுவ வேண்டும், அவர்களும் கழுவ வேண்டும்.


வராமல் தடுக்க முடியுமா?



 

வராமல் தடுக்க முடியும்; வந்து விட்டால் சுத்தபத்தமாக இருந்து கொண்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். முறையாக கைகளை சுத்தப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்ட நபர் பொது இடங்களை தொடாமல் இருந்தாலே இது பரவாது.


எப்போது குணமாகும்?

 

 ஒருவருக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் நான்கு முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வெளிப்படும். முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் சரியாகிவிடும். கணினியில் வேலை பார்ப்பது உள்பட வழக்கமான வேலைகள் அனைத்தையும் பார்க்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அது மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும்.


கண் பரிசோதனை தேவையா:




வைரஸ் கண் நோய்க்கு கட்டாயம் பரிசோதனை தேவை பார்வை பாதிப்பு, கருவிழி பாதிப்பு, கண்ணின் உட்புற அமைப்புகள்; மதிப்பீடு ஆகியவை பரிசோதனையில் அடங்கும். கருவிழி புண்கள் தழும்புகளாகாமல் தடுக்கவும். மருத்துவர் ஆலோசனை அவசியம்.இதில் ஸ்லிட் லாம்ப் பரிசோதனை, ஃப்ளுரேசின் கண் பரிசோதனை ஆகியவை அடங்கும். முழுமையான இரத்த பரிசோதனை, அடினோ வைரஸ் தொற்றைக் கண்டறிந்து உறுதி செய்ய விரைவான அடினோ வைரஸ் ஸ்கிரீனிங் / பிசி ஆர் சோதனை செய்யலாம். 


கண் நோய் / இமைப்படல அழற்சிக்கான சிகிச்சைகள்:


 


வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சிக்கென்று தனியே சிகிச்சைகள் எதுவும் இல்லை. நம்முடைய அந்த வைரஸ்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இந்த தொற்று ஏற்பட்ட சமயங்களில் உடலின் வெப்பநிலையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். அதனால் சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.


ஒருவேளை பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் கண் நோய் என்றால் கண் மருத்துவர் பரிசோதனை செய்து, தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஆன்டி பயாடிக் சொட்டு மருந்துகளை பரிந்துரை செய்வார்.



 

அழற்சியால் ஏற்பட்ட தொற்று என்றால் அதற்கு தகுந்தபடி கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிற சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.


இதில் எந்த வகை தொற்றாக இருந்தாலும் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரையிலும் தான் இந்த தொற்றுக்கள் இருக்கும். அதற்கு மேல் இருக்காது.


மெட்ராஸ் ஐ வராமல் தற்காத்து கொள்வது எப்படி:


நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது கண் வலி  பரவுவதைத் தவிர்க்கவும் நிறுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்:  




மெட்ராஸ் ஐ தங்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அனைவரும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.


கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள். அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.


தினமும் கைக்குட்டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.


தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.


கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது


கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது.


தொற்று முற்றிலும் நீங்கும் வரை, “கான்டாக்ட் லென்ஸ்’ அணியக் கூடாது.


குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.


சாதாரண குளிர்ந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும்.


வெளியில் சென்றால் முகம் மற்றும் கண்ணை தொடாமல் வீடு வந்தவுடன் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.


மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த நோய் பரவும்.


இது எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரணமான நோய்த் தொற்று என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகிவிடும்.


 நீங்கள் கண் நோய்  நோயாளியுடன் நெருக்கமாக வாழ்ந்தால் என்ன செய்ய வேண்டும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான சில தடுப்பு குறிப்புகள் இங்கே:




• குறிப்பாக குடும்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வெண்படலத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் அதிக அளவு சுகாதாரத்தை பராமரிக்கவும். தொற்று பரவாமல் தடுக்க உங்கள் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் துண்டுகளை சூடான நீரில் கழுவவும். உங்கள் வீட்டை சுத்தமாகவும் கிருமிகள் அற்றதாகவும் வைத்திருக்க நல்ல தரமான கிருமிநாசினியைப் பயன்படுத்தவும்.


• தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


• எப்பொழுதும் வழக்கமான இடைவெளிகளுக்கு இடையே கைகளை நன்கு கழுவி, அடிக்கடி உங்கள் முகம் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். 


    


• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். பச்சை இலை காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு பழங்களில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் இந்த கண் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.


• கண்களைத் துடைக்க கைக்குட்டைகள் அல்லது துண்டுகளுக்குப் பதிலாக செலவழிக்கும் திசுக்களைத் தேர்வு செய்யவும். பயன்பாட்டிற்குப் பிறகு, இந்த திசுக்களை தரையில் அல்லது பிறருக்கு எளிதில் அணுகக்கூடிய எந்தப் பகுதியிலும் வீச வேண்டாம்.


• நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது, எப்போதும் கண்களை சன்கிளாசால் மூடிக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது, கண்கள் தூசி மற்றும் வெளிநாட்டுத் துகள்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கும், இது பிற்கால கட்டத்தில் கண் வலியைத் தூண்டும்.


• கண் மேக்கப் மற்றும்/அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதையும் பகிர்வதையும் தவிர்க்கவும்.


ஓய்வு தேவையா ? 




 மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த உணவை சாப்பிட வேண்டும். கண்ணுக்கு நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம். இவற்றை பின்பற்றினால் விரைவில் மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து மீள முடியும். மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தாங்கள் உபயோகித்த பொருட்களை மற்றவர்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. 


அபூர்வ வகை கிருமிகளால் வரும் கண் நோய்:

கண் நோய் (சென்னை கண் நோய்)காரணங்கள் :


வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவை சிவப்புக் கண்ணின் இரண்டு முக்கிய வகைகள்:


1. வைரல் கண் நோய் (சிவப்பு கண்):



 

சிவப்பு கண்களுக்கு காரணமான வைரஸ்கள் பின்வருமாறு:


• ஹெர்பெஸ் வைரஸ் - அசாதாரணமானது ஆனால் மிகவும் ஆபத்தானது. சிவப்பு, வீக்கமடைந்த கண்களுக்கு முக்கிய காரணம் வைரஸ் தொற்று ஆகும். அடினோவைரஸ்கள் நோய்த்தொற்றுக்கு மிகவும் பொதுவாக காரணமான வைரஸ் வகையாகும். கண் சிவப்பை ஏற்படுத்தக்கூடிய பிற வைரஸ்கள் அடங்கும்.


• ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (HSV), வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV),

• பாக்ஸ் வைரஸ் (மொல்லஸ்கம் கான்டாகியோசம், தடுப்பூசி),

• picornavirus (என்டோவைரஸ் 70, காக்ஸ்சாக்கி A24), மற்றும்

• மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV).


    மூக்கில் இருந்து கண்களுக்கு பரவும் தொற்று நோயால் மக்கள் வைரஸ் சிவப்புக் கண்ணைப் பெறலாம். இது இருமல் அல்லது தும்மலில் இருந்து நேரடியாக கண்ணில் இறங்கும் நீர்த்துளிகள் மூலமாகவும் பரவுகிறது. வைரஸ் சிவப்புக் கண் மேல் சுவாச தொற்று அல்லது குளிர்ச்சியிலிருந்து உருவாகலாம். வைரல் சிவப்புக் கண் நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து சில நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை நீடிக்கும். சில வகையான வைரஸ் கண் நோய்  , கார்னியாவில் புண்களை உருவாக்கும் மேலோட்டமான பங்க்டேட் கெராடிடிஸாக மாறுகிறது. இது மேலோட்டமான பங்டேட் கெராடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.


பரவாத வகை கண் நோய்:


1. இரசாயன(chemical) கண் நோய் (சிவப்பு கண்):


ஏதேனும் எரிச்சலூட்டும் பொருள் கண்களுக்குள் நுழையும் போது கெமிக்கல் கண் வலி  ஏற்படலாம். பொதுவான புண்படுத்தும் எரிச்சல்


  


• வீட்டு சுத்தம் செய்பவர்கள்,

•எல்லா வகையான ஸ்ப்ரேக்கள்,

• கண்ணில் ஒரு ரசாயன தூள்,

• புகை,

• தொழில்துறை மாசுபடுத்திகள்.


ஒரு எரிச்சலூட்டும் பொருள் கண்ணுக்குள் நுழைந்தால், உடனடியாக, அதிக அளவு தண்ணீரில் கண்களைக் கழுவுவது மிகவும் முக்கியம். ப்ளீச் மற்றும் பர்னிச்சர் பாலிஷ் போன்ற பொதுவான வீட்டுப் பொருட்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எரிச்சலூட்டும் அல்லது ரசாயனம் பாதுகாப்பானது என்று நினைத்தாலும், உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்த வகையில் கண் உறுத்தலும், வலியும் அதிகமாக இருக்கும். அரிப்போ நீர், சீழ் வடிதல் போன்றவை இருக்காது.


2. ஒவ்வாமை கண் நோய் (சிவப்பு கண்):


ஒவ்வாமை கண் நோய் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய,  ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (ALLERGIC CONJUNCTIVITIS)இங்கே கிளிக் செய்யவும்: அலர்ஜிக்  கண் நோய் என்பது பெரும்பாலும் இரண்டு கண்களையும் பாதிக்கின்ற இந்த நோயினால் கண்ணில் அரிப்பு, நீர் வடிதல், ஏதோ ஒன்று விழுந்த மாதிரி இருக்கும். காற்றில் உள்ள தூசு, பூக்களில் உள்ள மகரந்தத்தூள், தோல் நோய் மருந்துகள், அலங்கார வாசனைப் பொருட்கள் மற்றும் காண்டக்ட் லென்ஸ் என்கிற கருவிழி ஒட்டு லென்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும். கண்கள் வீங்கி, கண்ணீர் மற்றும் அரிப்புடன் பார்வை மங்கலாகத் தெரியும்.








Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps