சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்
நீரிழிவு விழித்திரை நோய் என்பது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது கண் விழித்திரை பாதிப்பது. இரத்த நாளங்கள் சேதமடையும். சர்க்கரை வியாதியுள்ளவர்கள் 70 சதவீதம் பேர் கண்கள் பாதிப்படைகிறார்கள். சாதரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் அறிமுகம், விழிப்புள்ளி வீக்கம், நீரிழிவு விழித்திரை வியாதி, அறிகுறிகள் , நினைவில் வைக்கவும், அபாய காரணிகள், விழிப்புள்ளி வீக்கம் கண்டுபிடிப்பது எப்படி, பக்க விளைவுகள், நரம்பு ரத்தக் கசிவு, கண்டுபிடிப்பது எப்படி, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது .