மேலோட்டமான கருவிழி போட்டு கண் நோய்
 (கண் வலி )

டாக்டர். சுரேஷ் கண் மருத்துவமனை

தேங்காய்பட்டணம் ரோடு, வெட்டுமணி, மார்த்தாண்டம்.

ph: 7200204030    
    அடினோ வைரஸ் எனப்படும் ஒரு கிருமியினால்  உருவாகும் இந்த நோய் சென்னை கண்நோய் இளம் சிவப்பு கண், கண்வலி, மெட்ராஸ் ஐ என பல பெயர்களில் அறியப்படும். இதை ஆங்கிலத்தில் சூப்பர்பிஷியல் பங்டேட் கெரட்டைடிஸ் என அழைப்போம். சென்னை கண் நோய் என்ற சொல் பொதுவாக வைரஸ் பாக்டீரியா, கிளாமிடியா மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் கண்நோய்களையும் சேர்ந்த பொதுவான பெயர்.


    இந்த நோயை உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர். கிரிக் பேட்ரிக் என்பவர். இவர் உலகில் இரண்டாவது மிகப் பழமையான எழும்பூர் கண் மருத்துவமனையில் பணியாற்றும் போது இதைக் கண்டு பிடித்ததால் இது சென்னை கண்நோய் என அழைக்கப்படும்.


  
    வெப்பம் அதிகமான நேரங்களில் இந்த வைரஸ் கிருமி அதிகமாக பரவும். குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் இந்த நோயை காண்பது அரிது .10 வருடங்கள் நான்  கண் மருத்துவராக மூன்னார் பகுதியில் வேலை செய்த போது ஒரு சென்னை கண் நோயாளியையும் பார்த்ததில்லை.


எப்படி பரவுகிறது: 


    வைரஸ் கிருமிகள் கண் நோய் உள்ளவர் மீதும் அவர் தொட்ட இடங்களிலும் அவர் உபயோகித்த பொருட்களிலும் படர்ந்திருக்கும். நோய் உள்ளவர்களை நாம் தொடும் போதோ அல்லது அவர்கள் தொட்ட, உபயோகித்த பொருட்களை நாம் தொடும் போது  நோய் பரவல் ஏற்படுகிறது. அவர்கள்  கண்களை நாம் பார்ப்பதனால் நோய் பரவல் ஏற்படாது.


  


  நோயின் அறிகுறிகள்:


    கண் வெள்ளைப் பகுதி இளஞ்சிவப்பு நிறமாக மாறுதல், கண் எரிச்சல் அல்லது அரிப்பு, அதிகப்படியான பழுப்பு அல்லது சளி வெளியேற்றம் . வெளிச்சத்திற்கு உணர்திறன் அல்லது கூச்சம் கண் வெளிபடலம் வீக்கம். காலையில் கண் வெண்பகுதியை மூடும் இமை பகுதியில் சிறிய புள்ளி வடிவில் புண்கள் அல்லது பாலிக்கிள் உண்டாகலாம்.


    எழுந்தவுடன் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டியிருக்கும். கருவிழியில்  சிறு புண்கள் ஏற்படும் போது பார்வை மங்கலும் நல்ல உறுத்தலும் ஏற்படும். காதின் முன்பக்கம் வலி அல்லது வலியுடன் கூடிய சிறிய கட்டி வரலாம்.
  
நோய் பரவல் தடுக்க:  


    சுய சுகாதாரம் தேவை. நோயாளி உபயோகிக்கும் சட்டை, இதர துணிகள், படுக்கை விரிப்பு, கைக்குட்டை, தலையணை உறை, டவ்வல் ஆகியவை தினமும் மாற்றப்பட வேண்டும். கண்களை கைகளால் தேய்ப்பதை தவிர்க்கவும். கூச்சம் தவிர்க்க கறுப்பு கண்ணாடி அணியலாம். கண்ணில் மருந்து போட்டவுடன் அல்லது கண்களை தொட்டால் கை கழுகுவது அவசியம். சிகிச்சை  தொடங்கி அறிகுறிகளில் பாதிப்பின் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும் வரை பிறருடன் தொடர்பை குறைத்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்டவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நாம் உபயோகிப்பதை தவிர்க்கலாம். நோயாளி தொட்ட இடங்களை கிருமி நாசினி உபயோகித்து சுத்தமாக்கவும். கண்ணாடி உபயோகிப்பது நல்லது.


கண் பரிசோதனை தேவையா:


    வைரஸ் கண் நோய்க்கு கட்டாயம் பரிசோதனை தேவை. பார்வை பாதிப்பு, கருவிழி பாதிப்பு, கண்ணின் உட்புற அமைப்புகள் மதிப்பீடு ஆகியவை பரிசோதனையில் அடங்கும். கருவிழி புண்கள் தழும்புகளாகாமல்  தடுக்கவும் மருத்துவர் ஆலோசனை அவசியம். இதில் ஸ்லிட் லாம்ப் பரிசோதனை ஃப்ளோரெசின் கண் பரிசோதனை ஆகியவை அடங்கும். முழுமையான இரத்த பரிசோதனை,அடினோவைரஸ் தொற்றைக் கண்டறிந்து உறுதி செய்ய விரைவில் அடினோவைரஸ் ஸ்கிரீனிங் / பிசிஆர் சோதனை செய்யலாம்.முற்றிலும் குணமாக எத்தனை நாளாகும்:


     இது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகலாம்.


மருத்துவ சிகிச்சை: 


    இளஞ்சூட்டில் துணிகளை கண்களில் மேல் வைத்து எடுத்தால் கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி நோய் விரைவில் குறையலாம். காட்டன் பஞ்சு எடுத்து தண்ணீரில் நனைத்து பழுப்பு அல்லது சளியை நீக்கலாம். 


    தினமும் 2 லிட்டர் தண்ணீர் சரியான நேரங்களில் உணவு, உறக்கம் மற்றும் ஓய்வு விரைவில் குணமாக உதவும்.


  
    மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் உபயோகிக்கவும், குளிப்பதில் தவறில்லை கண்களைச் சுற்றி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். பார்வை தெளிவடையும் வரை வாரம் ஒருமுறை மருத்துவரை பார்ப்பது நல்லது. (புண் தழும்பாக மாறினால் பார்வை பாதிக்கப்படலாம். கண்களில் சிகப்பு மாறும்போது வேலைக்கு செல்லலாம்.
வைரஸ் கிருமி :


    அடினோவைரஸ் வகை  8 மற்றும் 19. கிருமி உடம்பில் வந்த பின் 4 முதல் 7 நாட்கள் கழிந்து நோய் ஆரம்பமாகும். வைரஸ் பரவுதல் இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.


DR.SURESH EYE HOSPITAL

FOR DETAILS CONTACT PH. NO: 7200204030
WEBSITE: www.suresheyehospital.in

Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps