கிட்டப்பார்வை (Myopia):


I.  கிட்டப்பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும் தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும்.


 

 


II. இந்த குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி லென்ஸ் உபயோகிக்கலாம். 


  - 3 டயா (Dioptre) - லேசான கிட்டப் பார்வை 

⚫  - 3 முதல் 6 டயா நடுத்தர கிட்டப் பார்வை 

⚫  - 6 டயா அதற்கு மேல் அதிகப்படியான கிட்டப் பார்வை  


தூரப்பார்வை (Hyperopia):

இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக தெரியும். இந்த குறைபாடு உள்ள கண்களில் ஒளி விழித்திரையைத் தாண்டி அதனால் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி லென்ஸ் உபயோகிக்கலாம்.

சமச்சீரற்ற பார்வை( Astigmatism):


 இந்த குறைபாடு உள்ள கண்களில் ஒளி சரியாகக் குவியாது. கருவிழி அச்சு வளைவுகளில்  மாற்றங்கள் இருந்தால் சமச்சீரற்ற பார்வை உண்டாகும். உருளை வடிவ லென்ஸ் அணிவதால்  குறைபாட்டைத் தவிர்க்கலாம்.


அறிகுறிகள்:-


பொதுவாக குழந்தைகள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கலாம்.


 


*   மாறுகண் 

* பார்வை மங்கல்

* கண் இமைகளின் விளிம்புகளின் நீண்டகால வீக்கம்

* முயற்சி செய்து உற்றுப் பார்க்க வேண்டிய தேவை, கண்களைப்பு, தலைவலிகள் ஏற்படலாம்.

*  தலையை எப்போதும் ஒரு புறம் சாய்த்தே பார்த்துக் கொண்டிருந்தால்,
*  அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது 

*  புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது. 

* கண்களை சுருக்கி பார்ப்பது 

 *  ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.

*  கண்களைச் சுழற்றுவது

*  வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் 

*  கவனம் செலுத்த இயலாமை 

*  திடீரென மதிப்பெண்கள் குறைவது

*  வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.

* கண் வலி

*   பார்க்கும் பொருட்களெல்லாம் இரண்டிரண்டாகத் தெரிந்தால்,

*  கண்களில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிந்தால்,

*  கண்கள் அளவுக்கு மீறி பெரியதாக இருந்தால்,

*  வெளிச்சத்தைக் கண்டு பயந்தால், அதிகமான வெளிச்சத்தில்  கண்களை மூடிக் கொண்டால்,


இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். 


பார்வை குறைவு அறிகுறிகள் இல்லையென்றால் கண் பரிசோதனை தேவையா?எப்போது ? 


1. குழந்தை பிறந்த ஆறு மாத காலத்திற்குள் ஒரு முறை

2. குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது ஒரு முறை

3. குறை பிரசவத்தில் பிறந்திருந்தால்,

4. குழந்தைக்கு கண்ணில் பிரச்சினை இல்லை என்றாலும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும்.

5. கண்ணுக்கு காயம்

6. அறுவை சிகிச்சை தலையீடுகள்

7.  கார்னியா நோய்கள்

8. உங்கள் குழந்தையின் கருவிழி கலங்கலாகக் காணப்பட்டல்,

9. அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய் வந்திருந்தால் அவை  குணமடைந்தபிறகு ஒரு முறை,

10. கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால்  கண்டிப்பாக வருடத்திற்கொரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

11. கண்களில் ஏதேனும் தொற்று நோய்க் கிருமி பரவினால் .பெற்றோர்கள் எங்கே கவனம் செலுத்த வேண்டும்:

 

குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள்  14 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை. குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே முதிர்ச்சி அடைந்து விடும். எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 14  வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும். அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவது சுலபமல்ல.

காரணங்கள்:

 

    

குடும்ப வரலாறு (மரபு ரீதியான பாதிப்பு):
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பார்வை குறைபாடு பாதிப்பு இருந்தால், அந்த பரம்பரை குறைபாடுகள் காரணமாக குழந்தைகளுக்கு பலவீனமான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு ஆகியவை ஏற்படலாம். 


  நரம்பியல் பிரச்சனை(மரபு சார்ந்த அல்லது மரபு சாராத)


மூளையில் இருந்து கண் பார்வைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் பார்வை குறைபாடு ஏற்படக்கூடும்.


ஒரு குடும்ப உறுப்பினருக்கு அல்பினிசம் நோய் அல்லது ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா இருந்தால், இந்த நிலைமைகள் குழந்தைகளுக்கு பலவீனமான கண்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே பார்வை மங்குதல் ஏற்படலாம்.


மரபு சாராத பாதிப்புகள் தொற்று நோய்களாலும், புற்று நோய்களாலும் (ரெட்டினோபிளாஸ்டோமா) அல்லது காயத்தினாலும் ஏற்படலாம்.பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகளின் பார்வை குறைபாடு 


⚫ மன அழுத்தம் 

 படிப்பு 

 கம்ப்யூட்டர் (கணினி)

 வெளியில் விளையாட்டு குறைவு 


ஆகிய காரணங்களால் பள்ளிப் பருவ குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை வருகிறது. இதற்கு பள்ளி கிட்டப்பார்வை (School Myopia) எனப்பெயர்.


பரிசோதனை

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை: 

பிறக்கும் போது குழந்தையின் கண்கள் முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்காது. குழந்தை பிறந்த 6 மாத வயதுக்குள் அவர்களது கண்கள் முதிர்ச்சியடைகின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் கண்கள் பெரியவர்களை போல கவனம் செலுத்த முடிகிறது. அவர்களால் நிறத்தை அடையாளம் காண முடிகிறது. குழந்தையின் கண்களின் நிலையை சரிபார்க்க மருத்துவர் சில சோதனைகள் குறித்து கேட்கலாம்.

அதிக வெளிச்சம் திடீரென பாயும் போது குழந்தை கண்களை திறந்து மூடுகிறார்களா, கண்கள் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த முடிகிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்.


மழலை குழந்தைகள் பார்வை சோதனை: 

குழந்தைக்கு எழுத்துக்களை படிக்க முடியாத போது அவர்களது கண்களை வேறு வழிகளில் சோதனை செய்யலாம்.


1. ரெட்டினாஸ்கோபி விழித்திரையின் பிரதிபலிப்பை ஆய்வு செய்து கண்ணின் ஒளித்திறனை கண்டு பிடிக்கலாம். 2. எழுத்துக்கள், சிறிய படங்கள், சின்னங்கள் போன்ற படங்களை காட்டி பரிசோதனை செய்யலாம். 


 


 

3. ஓரிடத்தில் அமரச்செய்து, குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எழுத்துகள்/எண்களைப் படிக்கச் சொல்லி பார்வைத் திறனைக் கண்டறியும் பரிசோதனை இது.    

குழந்தைகளுக்கு இந்த படங்களை உபயோகித்து பார்வை நிலைமையை கண்டுபிடிக்கலாம்.


பிளவு-விளக்கு பரிசோதனை(slit-lamp):


  

 

    பிளவு விளக்கு என்பது ஒரு உயர்-தீவிர ஒளி மூலத்தைக் கொண்ட ஒரு கருவியாகும். கண்ணிமை, வெள்ளை விழி, வெள்ளை விழியில் வெளிப்படலம், கருவிழி, இயற்கை  லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதக் கண்ணின் முன் பகுதி அல்லது முன் கட்டமைப்புகள் மற்றும் பின்புறப் பகுதியான விழித்திரை ஆய்வு செய்ய விளக்கு உதவுகிறது. இது பல்வேறு கண் நோய்களை  கண்டறிய உதவுகிறது.


பார்வைத் திறன் பரிசோதனை (Refraction Test):


      

 

  பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. இப்போதெல்லாம் பலருக்கும் பள்ளிப் பருவத்திலேயே பார்வையில் குறை உண்டாகி, கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். எனவே, எட்டு வயதுக்குள் எல்லாக் குழந்தைகளும் ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.


விழித்திரை புகைப்பட கருவி(fundus camera): 


 


      விழித்திரை புகைப்பட கருவி  என்பது ஒரு சிறப்பு மிகுந்த சக்தி நுண்ணோக்கி ஆகும், இது விழித்திரை, விழித்திரை இரத்த நாளங்கள், விழித்திரை நடுநரம்பு, விழிப்புள்ளி மற்றும் பின்புற துருவம் (அதாவது fundus) உள்ளிட்ட கண்ணின் உட்புற மேற்பரப்பை புகைப்படம் எடுக்க வடிவமைக்கப்பட்ட புகைப்பட கருவியுடன்   உள்ளது. Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps